×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாத்ரூம் குளியலுக்கு அக்கப்போரா?.. யார் முதலில் குளிப்பது?.. அண்ணனை அடித்துக்கொன்ற தம்பி..!

பாத்ரூம் குளியலுக்கு அக்கப்போரா?.. யார் முதலில் குளிப்பது?.. அண்ணனை அடித்துக்கொன்ற தம்பி..!

Advertisement

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மொராதாபாத் பகுதியில் 33 வயது கேஸ் வெல்டிங் பணியாளரை அவரது தம்பி அடித்துக் கொலை செய்துள்ளார். வீட்டின் குளியலறையில் முதலில் யார் குளிப்பது? என்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இந்த வாக்குவாதம் முற்றவே, இருவரும் ஒருவரையொருவர் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பகீர் உசேன் என்பவர் உயிரிழந்து விட்டதை தொடர்ந்து அவரின் மனைவி மற்றும் மூன்று மகள்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் 30 வயதுடைய ஷதாப் காவல் நிலையத்திற்கு சென்று தனது சகோதரரை மரக்கட்டையால் அடித்துக் கொலை செய்துவிட்டதாக சரணடைந்துள்ளார். இதனால் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். உயிரிழந்தவரையும் சேர்த்து அவரது சகோதரர்கள் 5 பேர் அப்பகுதியில் உள்ள 2 மாடி வீட்டில் குடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#UttarPradesh #Murder #India
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story