×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பணத்துக்காக பாசத்தையே அடகு வைத்த தாய்! பெற்ற மகளையே ரூ.1.5 லட்சத்திற்கு விற்று….. பித்தலாட்டம் ஆடிய தாய்…! போலீஸ்ஸின் கிடுக்குப்பிடி விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை!!!

உத்தரகண்டில் பணத்தேவைக்காக 15 வயது மகளை விற்ற தாய், பின்னர் கடத்தப்பட்டதாக பொய் புகார் அளித்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் பணத்தேவைக்காக 15 வயது மகளை விற்ற தாய், பின்னர் மகள் கடத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்ததுடன், உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி உத்தரப் பிரதேசத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

பணத்துக்காக மகளை விற்ற தாய்

35 வயதான அந்தப் பெண், தனது பணத்தேவையை சமாளிக்க 15 வயது மகளை ரூ.1.5 லட்சத்திற்கு ஒரு கும்பலிடம் ஒப்படைத்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், ஒப்பந்தப்பட்ட தொகையில் ரூ.80 ஆயிரம் மட்டுமே கிடைத்ததால் ஆத்திரமடைந்த அவர், தனது மகள் கடத்தப்பட்டதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: கள்ளக்காதலால் கதிக்கலங்கிய குடும்பம்! மனைவியை கொடூரமாக தாக்கி.... 2 குழந்தைகளுடன் ஓட்டம் பிடித்த கணவன்! பகீர் சம்பவம்...!!!

விசாரணையில் அம்பலமான மனிதக் கடத்தல்

புகாரின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய போலீசார், சிறுமி உத்தரப் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து பாதுகாப்பாக மீட்டனர். அதன்பின் நடத்தப்பட்ட விசாரணையில், பிங்கி மாலிக் என்ற பெண் மூலம் சிறுமியை பெற்ற லவி குமார் என்பவர், திருமணம் செய்து வைப்பதாக கூறி மணீஷ் என்பவரிடம் ரூ.2 லட்சத்திற்கு மீண்டும் விற்றது தெரியவந்தது. இதனால் மனிதக் கடத்தல் தொடர்பான சட்டவிரோத நடவடிக்கையும் வெளிச்சத்துக்கு வந்தது.

நான்கு பேர் கைது

தாயிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், பணத்துக்காக மகளை விற்றதையும், மீதித் தொகை கிடைக்காததால் பொய் புகார் அளித்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து சிறுமியின் தாய் உட்பட இந்தச் சட்டவிரோத செயலுக்கு தொடர்புடைய நான்கு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட சிறுமிக்கு தேவையான பாதுகாப்பும், சட்டப்படி தொடர்ந்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

இதையும் படிங்க: இனிமேலும் பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்த மக்கள்! குற்றங்களை செய்ய குற்றவாளிகள் நடுங்க வேண்டும்! பரப்பரப்பு அறிக்கை...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Uttarakhand #உத்தரகண்ட் #Minor Girl #குழந்தைகள் கடத்தல் #police investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story