15 வயதில் திருமணம்.... 22வயதில் 6 வது குழந்தை! ஒரு பெண் வயதுக்கு வரும் முன்பே நடந்த கொடூரம்...லேடி மருத்துவர் வெளியிட்ட அதிர்ச்சி பின்னணி..!!!
உத்தரப் பிரதேசத்தில் 22 வயதிலேயே ஆறாவது முறையாக கர்ப்பமான இளம்பெண் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் 22 வயது பெண் ஒருவர் ஆறாவது முறையாக கர்ப்பமாகியிருப்பது தொடர்பான தகவல் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஐந்து குழந்தைகளுக்குத் தாயான அந்தப் பெண், மீண்டும் ஆண் குழந்தை வேண்டும் என்ற காரணத்தால் கர்ப்பமடைந்ததாக கூறியிருப்பது பல தரப்பிலும் விவாதமாகியுள்ளது.
இந்த தகவலை ஸ்பந்தன் மருத்துவமனையின் மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் பிரக்யா தோமர் வெளியிட்ட வீடியோவின் மூலம் பகிர்ந்துள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த தம்பதியரான இவர்களுக்கு, பெண்ணுக்கு 15 வயதாக இருந்தபோதே திருமணம் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 வயதில் திருமணம்.. 22 வயதில் 6வது கர்ப்பம்
தகவலின்படி, அந்தத் தம்பதியருக்கு தற்போது நான்கு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இருப்பினும், “ஒரே ஒரு மகன் போதாது, இன்னொரு ஆண் குழந்தை வேண்டும்” என்ற குடும்ப விருப்பத்தால் மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளதாக அந்தப் பெண் மருத்துவரிடம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கனவு நினைவாகியும் அனுபவிக்க முடியல.... பணம் வரும் போகும், ஆனால் அதை இழக்க மனமில்லாமல் தேம்பி தேம்பி அழும் வாலிபரின் வீடியோ.!!!
அடுத்தடுத்து குழந்தை பெற்றதால் உடல்நல பாதிப்புகள் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மூச்சுத் திணறல், தலைச்சுற்றல், கடுமையான உடல் வலி போன்ற பிரச்சினைகளால் அவர் அவதிப்பட்டு வருவதாக மருத்துவர் விளக்கியுள்ளார்.
மருத்துவர் எச்சரிக்கை
போதிய இடைவெளியின்றி தொடர்ந்து கர்ப்பமாகுவது தாயின் உயிருக்கும் ஆபத்தாக அமையலாம் என்று டாக்டர் பிரக்யா தோமர் எச்சரித்துள்ளார். குறிப்பாக இளம் வயதிலேயே தொடர்ந்து பிரசவம் நடப்பது பெண்களின் உடல்நிலையை கடுமையாக பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் குடும்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. கிராமப்புறங்களில் இன்னும் ஆண் குழந்தைக்கான சமூக அழுத்தம் நீடித்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சமூக வலைதளங்களில் கடும் விவாதம்
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து பலரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். “ஒரு பெண் முழுமையாக வளர்ந்த வயதுக்குச் செல்லும் முன்பே தாயாகிவிட்டார்” என்றும், “ஆண் குழந்தை ஆசைக்காக பெண்களின் உடல்நலம் புறக்கணிக்கப்படுகிறது” என்றும் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
மேலும், பொருளாதார வசதிகள் குறைவாக இருந்தபோதும் தொடர்ந்து குழந்தைகள் பெற்றுக்கொள்வது குடும்பத்தின் எதிர்காலத்தையும் பாதிக்கும் என சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.