×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

லிவிங் டுகெதர் காதலன் கொலை.. மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் சம்பவம்..! அதிர்ச்சி திருப்பம்.!

லிவிங் காதலனை கழுத்தை நெரித்துக்கொன்ற வழக்கில் சகோதரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காதலனை பெண் கொலை செய்து தூக்கில் தொங்கிவிட்ட சம்பவம் நடந்துள்ளது.

3 குழந்தைகள்:

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள காஸ்யபத், டிரோனிகா சிட்டியில் வசித்து வருபவர் ஜாகிர். இதே பகுதியைச் சேர்ந்தவர் கிரண். இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக லிவிங் ரயில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. கிரணுடன் அவரின் 3 குழந்தைகளும் வசித்து வந்துள்ளனர்.

இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் சில்மிஷம் செய்த முதியவர்.. விழுந்தது தர்ம அடி.. விருதுநகரில் சம்பவம்.!

கொலை:

இதனிடையே, ஜாகிருக்கு கிரணின் 13 வயது மகள் மீது தவறான எண்ணம் ஏற்பட பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக ஜாகிர் - கிரண் இடையே அடிக்கடி பிரச்னையும் ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில், கடந்த ஜூன் 23ம் தேதி ஜாகிர் கிரண் மற்றும் அவரது சகோதரி காஷிஷு ஆகியோரால் கொலை செய்யப்பட்டார்.

கைது:

சகோதரிகளான இருவரும் ஜாகிரை கட்டையால் தாக்கி, துண்டால் கழுத்தை நெரித்துக்கொலை செய்துள்ளனர். பின் துண்டை சீலிங் பேனில் கட்டி தற்கொலை போல நாடகமாடி இருக்கின்றனர். காவல்துறையினரின் விசாரணையில் முதலில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தவர்கள், பின் 13 வயது சிறுமிக்கு ஜாகிர் பாலியல் தொல்லை கொடுத்த காரணத்தால் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். விசாரணைக்குப்பின் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: கர்ப்பிணி மனைவியை காலால் எட்டி உதைத்த கணவன்.. துள்ளத்துடிக்க கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #illegal affair #Sexual Harassment
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story