சகோதரியின் திருமணத்தை நடத்த பணமில்லாததால் ஆசிரியர் தற்கொலை.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!
தனது சகோதரியின் திருமணத்தை நடத்த பணம் இல்லாத விரக்தியில் ஆசிரியர் உயிரை மாய்த்துக்கொண்டார். இந்த சம்பவம் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது.
திருமண செலவுகளை ஈடு செய்ய இயலாமல் தவித்த இளம் ஆசிரியர் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
குறைந்த ஊதியம்:
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பலியா மாவட்டம், உபோன் பகுதியில் வசித்து வருபவர் மனிஷ் சர்மா (வயது 25). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் பயிற்சி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மாத ஊதியம் மிகக்குறைந்த அளவே கொடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.
இதையும் படிங்க: காதல் கணவனை குடும்பத்துடன் சேர்ந்து போட்டுத்தள்ளிய மனைவி.. அதிர்ச்சிதரும் காரணம்.!
திருமண செலவு:
இதனிடையே, மனிஷ் சர்மாவின் சகோதரிக்கு திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்துள்ளது. சில நாட்களில் நிச்சயதார்த்தமும் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, மனிஷ் சர்மாவின் வருமானம் திருமண செலவுகளுக்கு போதவில்லை என கூறப்படுகிறது.
விரக்தியில் தற்கொலை:
இதனால் மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட மனிஷ் சர்மா, ஒருகட்டத்தில் வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், மணீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Namakkal: விஷப்பூச்சி கடித்து சிறுமிக்கு நேர்ந்த சோகம்.. கண்ணீரில் பெற்றோர்.!