பள்ளிக்கூட்டத்தில் இப்படி ஒரு சம்பவமா..? ஆசிரியரை இழுத்து சென்று உதட்டை கடித்துக் குதறிய 12 ஆம் வகுப்பு மாணவன்! சிசிடிவியில் சிக்கிய ஆதாரம்!
உத்தரப் பிரதேசம் மெயின்புரியில் மாணவன் ஆசிரியை மீது கொடூர தாக்குதல் நடத்தி உதட்டை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி போலீஸ் விசாரணை தீவிரமாகியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரியில் நடந்த கொடூர தாக்குதல் சம்பவம் கல்வி உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 12-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது ஆசிரியை மீது வன்முறையாக தாக்குதல் நடத்தி, மனிதாபிமானத்தை மிஞ்சிய செயலில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியை மீது தொடர்ந்த தொல்லை
பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியை அதே பள்ளியில் பணியாற்றி வந்த நிலையில், அந்த பள்ளியில் பயிலும் மாணவன் நீண்ட நாட்களாக அநாகரிகமாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவனின் குடும்பத்தினரிடம் புகார் அளிக்கப்பட்டதும், சில காலம் அமைதியாக இருந்த அவன் மீண்டும் பழைய பழக்கத்தைத் தொடர்ந்தான். இதனால் மனவேதனை அடைந்த ஆசிரியை வேறு பள்ளிக்கு மாற்றம் பெற முடிவு செய்தார்.
வழிமறித்து நடந்த கொடூர தாக்குதல்
வேலையை விட்டு நின்ற பின்னரும் அந்த மாணவன் ஆசிரியைை தொடர்ந்து பின்தொடர்ந்ததாக தெரிகிறது. இந்நிலையில், டியூஷன் எடுக்கச் சென்றுகொண்டிருந்தபோது அவரை வழிமறித்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டான். எதிர்ப்பு தெரிவித்த ஆசிரியை மீது ஆத்திரமடைந்த அவன், அவரை இழுத்துச் சென்று கழுத்தை நெரித்ததுடன், இரு உதடுகளையும் கடித்து குதறியுள்ளான். மேலும், கூர்மையான ஆயுதத்தால் முகத்தையும் சிதைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
மாணவன் ஆசிரியைை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட ஆசிரியை முதலில் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் நிலைமை மோசமானதால் ஆக்ராவில் உள்ள உயர் சிகிச்சை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
போலீஸ் விசாரணை தீவிரம்
பாதிக்கப்பட்ட ஆசிரியையின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் மெயின்புரி போலீசார் FIR பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஆசிரியர் – மாணவர் உறவுக்கே களங்கம் விளைவிக்கும் இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மெயின்புரி சம்பவம் கல்வி நிலையங்களில் பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் ஒழுக்கம் குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் கல்வி நிர்வாகங்கள் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: பாகனை குத்தி கொன்ற யானையிடம்... இன்று 6 மாதக்குழந்தையை கொடுத்து விபரீத சோதனை! குழந்தை அதன் காலடியில் விழுந்து.... பதறவைக்கும் காட்சி!