பப்ஜி காதல்.. காதலனுக்காக பாகிஸ்தான் டூ இந்தியா ஓடிவந்த பெண்.. 4 குழந்தைகளுடன் கம்பி எண்ணும் பரிதாபம்.!..!!
கள்ளகாதலனுக்காக பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த இளம்பெண்; பப்ஜி காதல் உளவுத்துறையால் கம்பி எண்ணும் பரிதாபம்.!
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவை சேர்ந்தவர் சச்சின். இவர் பப்ஜி விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நிலையில், பப்ஜி விளையாட்டின் போது பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் என்ற பெண்ணுடன் பழக்கமும் ஏற்பட்டுள்ளது.
அவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் இருந்தபோதிலும், சச்சின் உடன் தொடர்ந்து பப்ஜி விளையாடி வந்துள்ளார். சிறிது நாட்களில் கடந்ததும் காதலாக மாற, தனது கணவரை விட்டுவிட்டு சச்சினை பார்க்க சீமா பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வந்துள்ளார்.
கடந்த மாதம் தனது குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு நேபாலுக்கு சென்ற சீமா, அங்கிருந்து சட்டத்திற்கு புறம்பாக இந்தியா வந்துள்ளார். பின் தனது பப்ஜி காதலன் சச்சினை சந்தித்து, அவருடன் தனது நான்கு குழந்தைகளுடன் நொய்டாவில் வாடகை வீடு எடுத்து தங்கி இருந்தார்.
இந்த தகவலை அறிந்த உளவுத்துறை அதிகாரிகள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து, அதிகாரிகள் சீமா - சச்சினை விசாரணை செய்தனர். அப்போது, பப்ஜி காதலால் சீமா சட்டத்திற்கு புறம்பாக பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வந்தது தெரியவந்தது. இதனால் குழந்தைகளுடன் சீமாவை போலீசார் கைது செய்துள்ளனர்.