தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

12ம் வகுப்பு மாணவி கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. காதலன், 2 நண்பர்கள் பதறவைக்கும் செயல்.. அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டல்.!

12ம் வகுப்பு மாணவி கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. காதலன், 2 நண்பர்கள் பதறவைக்கும் செயல்.. அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டல்.!

Uttar pradesh Noida 12 class Girl Student gang raped Advertisement

 

அறியாத வயதில் காதலில் விழுந்து காதலன் என தனிமையில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் அந்தரங்க விடியோவை பதிவு செய்து 5 மாதமாக நண்பர்களுடன் சேர்ந்து  அவரை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த துயரம் நடந்துள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா, கிரேட்டர் நொய்டாவில் வசித்து வரும் சிறுமி, அங்குள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியை இளைஞர் ஒருவர் காதல் வலையில் வீழ்த்தியிருக்கிறார் 

சிறுமியிடம் காதல் வார்த்தை பேசி கொஞ்சிய இளைஞன், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சிறுமியை கட்டபயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை சிறுமிக்கு தெரியாமல் வீடியோ எடுத்தும் வைத்துள்ளார். 

இந்த விடியோவை காண்பித்து சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த காதலன், அதனை தனது நண்பர்களுக்கும் அனுப்பி இருக்கிறான். அவர்களும் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

Uttar pradesh

இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் சிறுமி சிக்கித்தவிக்க, அவரின் நடவடிக்கையில் உள்ள மாற்றங்களை கவனித்த சிறுமியின் தாய் விசாரித்தபோது உண்மை அம்பலமாகியுள்ளது. 

இதனையடுத்து, சிறுமியின் தாய் பேட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குற்றவாளிகளுக்கு வலைவீசியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Uttar pradesh #India #Noida #Girl Student #gang rape #police
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story