ஹோட்டலில் காதலியுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்! வீரியமிக்க மாத்திரையால் அந்தரங்க அத்துமீறலில் வாலிபர்.... இறுதியில் நேர்ந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்!!!
உத்தர பிரதேசத்தில் காதலியின் விருப்பத்திற்கு எதிராக அத்துமீற முயன்றதாக கூறப்படும் நிதின் யாதவ், தகராறில் அவரை தாக்கியதில் நர்சிங் மாணவி உயிரிழந்தார்.
உத்தர பிரதேச மாநிலம் பிராசாபாத் பகுதியில் பிறந்தநாளை கொண்டாட காதலியை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற வாலிபர், தகராறில் அவரை தாக்கியதில் இளம் பெண் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அத்துமீற முயன்றதாக கூறப்படும் நிலையில், அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் நர்சிங் மாணவியான அவர் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறு
பிராசாபாத் பகுதியைச் சேர்ந்த நிதின் யாதவ் தனது பிறந்தநாளையொட்டி காதலியை அங்குள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர் வீரியத்தை அதிகரிக்கும் மாத்திரைகளை அதிகளவில் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: உச்சக்கட்ட கொடூரம்! கருக்கலைப்புக்கு மறுத்ததால் காதலன் மிரட்டல்...! மரத்தில் கட்டிவைத்து தீ வைத்து.... வெளிவந்த அதிர்ச்சி உண்மைகள்...!!!
இதையடுத்து காதலியிடம் அவரது விருப்பத்துக்கு மாறாக அத்துமீற முயன்றதாக தெரிகிறது. ஆனால், அந்த இளம் பெண் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சுவரில் தலையை மோதியதாக புகார்
தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த நிதின் யாதவ், அந்தப் பெண்ணின் தலையை சுவரில் பலமாக மோதியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், நர்சிங் மாணவியான அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து அங்கிருந்து நிதின் யாதவ் தப்பியோடியுள்ளார். தகவல் கிடைத்ததும் விரைந்து செயல்பட்ட உத்தர பிரதேச போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
‘சம்மதம் முக்கியம்’ என சமூக வலைதளங்களில் விவாதம்
காதல் அல்லது வேறு எந்த உறவாக இருந்தாலும், இருவரின் சம்மதமும் முக்கியம் என்ற கருத்து இந்த வழக்கைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஒருவருக்கு விருப்பமில்லை எனத் தெளிவாகக் கூறிய பிறகும் அதனை மீறி செயல்படுவது ஏற்க முடியாதது என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக பெண்ணின் சம்மதம் மதிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. உறவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் அதை வன்முறையாக மாற்றாமல் சட்டத்தையும், தனிநபரின் சுய உரிமையையும் மதிப்பதே முக்கியம் என்ற கருத்துகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: ஐயோ... யாராவது காப்பாத்துங்களே! மருத்துவமனை மேல் தளத்திலிருந்து திடீரேன குதித்த வாலிபர்.... அதிர்ச்சி வீடியோ!!!