சாலையில் பட்டப்பகலில் மாணவி மானபங்கம்; அதிர்ச்சி காட்சிகள் வைரல்.!
சாலையில் பட்டப்பகலில் மாணவி மானபங்கம்; அதிர்ச்சி காட்சிகள் வைரல்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்பூர் மாவட்டம், லைன் பஜார் பகுதியில் டிடி கல்லூரி சாலை இருக்கிறது.
இன்று இந்த சாலையில் மிதிவண்டியில் மாணவி ஒருவர் தனது முகத்தினை மறைத்தபடி வருகை தந்தார்.
அப்போது, அவரை இடைமறித்த இளைஞர் ஒருவர், தனது முகத்தினை மறைத்தபடி வந்தார். அவர் மாணவியுடன் பேச்சுக்கொடுத்தபடி இருந்தார்.
அச்சமயம் திடீரென சிறுமியை இளைஞர் வெளிப்படையாகவே மானபங்கம் செய்தார். மாணவியும் ஒன்றும் செய்ய இயலாமல் அங்கேயே இருந்தார்.
இதுகுறித்த விடியோவை பதிவு செய்த நபர் சமூக வலைத்தளங்களில் பதிவிடவே, அது வைரலாகி வருகிறது. காவல் துறையினர் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.