பாஜக பிரமுகரின் கார் மோதி மனநலம் பாதிக்கப்பட்டவர் பரிதாப பலி; நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ.!
பாஜக பிரமுகரின் கார் மோதி மனநலம் பாதிக்கப்பட்டவர் பரிதாப பலி; நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ.!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத், கவி நகர் பகுதியில் இருக்கும் நெடுஞ்சாலையில் பாஜக ஸ்டிக்கர் ஒட்டிய கார் ஒன்று வந்தது. சாலை நடுவே மனநலம் பாதிக்கப்பட்டவர் அமர்ந்திருந்த நிலையில், எதிர் திசையில் வந்தவர் அவரை கவனித்து வாகனத்தின் வேகத்தை குறைத்து இருக்கிறார்.
இந்நிலையில் அதே சாலையில் வந்து கொண்டிருந்த பாஜக பிரமுகரின் கார், நேரடியாக சாலையில் அமர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவரின் மீது மோதி விபத்திற்குள்ளாகிறது.
இந்த விபத்தில் காரின் அடியில் அவர் சிக்கிக்கொண்ட மனநலம் பாதிக்கப்பட்டவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்த காணொளிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வாகனத்தை அலட்சியமாக இயக்கி விபத்தை ஏற்படுத்தியது சுரப் ஷர்மா என்பதும், அவர் தனது நண்பரின் காரை எடுத்து வந்தபோது விபத்து நடந்ததும் உறுதியானது. இதனிடையே, விபத்தில் சிக்கியவர் பலியானதை தொடர்ந்து, சுரப் சர்மா கைது செய்யப்பட்டார். கார் பறிமுதல் செய்யப்பட்டது.