×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கனரக லாரியின் அதிவேகத்தால் சோகம்; ஆட்டோ அப்பளம் போல நொறுங்கி, 5 பேர் பரிதாப பலி.!

கனரக லாரியின் அதிவேகத்தால் சோகம்; ஆட்டோ அப்பளம் போல நொறுங்கி, 5 பேர் பரிதாப பலி.!

Advertisement

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்ரகூட் மாவட்டம், ஜான்சி - மிஸ்ராப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், ஆட்டோ ஒன்று சென்று கொண்டு இருந்தது. அதே சாலையில், எதிர் திசையில் கனரக லாரி ஒன்று வந்துள்ளது. 

இரண்டு வாகனமும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாக, ஆட்டோ அப்பளம் போல நொறுங்கியது. இவ்விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்தவர்களில் ஐவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். முதற்கட்ட விசாரணையில், லாரி ஓட்டுனரின் அதிவேகம் ஐந்து உயிர்களை பறித்தது தெரியவந்தது. விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Uttar pradesh #Chitrakoot #accident #India
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story