×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நிஜ மனித மறு பிறவி.... 3 வயசு தான் ஆகுது! முன்ஜென்ம நினைவுகளை அப்படியே அடையாளம் காட்டிய சிறுவன்! கிராமத்துக்கு போனதும் நடந்த அதிர்ச்சி... அதிர்ச்சியில் உறைந்து போன பெற்றோர்கள்!!!

உத்தரப் பிரதேசம் லக்கிம்பூரில் 3 வயது சிறுவன் முன்ஜென்ம நினைவுகளை கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி, கிராம மக்களிடையே ஆச்சரியத்தையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

Advertisement

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் 3 வயது சிறுவன் கூறிய தகவல்கள் கிராமத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தன்னுடைய முன்ஜென்மத்தைப் பற்றிய விவரங்களை அவன் தெளிவாகச் சொல்லியிருப்பதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இதனால் அந்தப் பகுதி மக்கள் கூட்டமாக திரண்டு வந்து சிறுவனை பார்க்கின்றனர். தற்போது இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.

மழலை பேச்சில் தொடங்கிய வினோத தகவல்கள்

லக்கிம்பூர் மாவட்டம் மைலானி பகுதியைச் சேர்ந்த சிவகுமார் – ராம்பெட்டி தம்பதியினருக்கு 2014 ஆகஸ்ட் 15ஆம் தேதி பிறந்த ஜீதன் என்ற சிறுவன், மூன்று வயதிலிருந்தே வித்தியாசமான விஷயங்களைப் பேசத் தொடங்கினான். தன் வீடு போலாப்பூர் கிராமத்தில் இருப்பதாகவும், தந்தையின் பெயர் விதேசி என்றும் அவன் அடிக்கடி கூறி அழுததாக பெற்றோர் தெரிவித்தனர். ஆரம்பத்தில் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும், அவன் தொடர்ந்து அதையே கூறியதால் பெற்றோர் கவனம் செலுத்தினர்.

கிராமத்துக்கு சென்றதும் நடந்த அதிர்ச்சி

இதையடுத்து, சிறுவனை போலாப்பூர் கிராமத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு விதேசி என்பவரை பார்த்தவுடன், “இவர்தான் என் அப்பா” என்று கூறி ஓடி அணைத்துக்கொண்டான். மேலும், விதேசியின் மனைவி வசந்தியையும் தன் அம்மாவாகக் கூறியதால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறுவன் வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் அவை வைக்கப்பட்ட இடங்களை சரியாகக் கூறியதும் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க: 9-ம் வகுப்பு மாணவியை 4 மாதங்களாக மாறி மாறி பலாத்காரம் செய்து சிதைத்த 10 பேர்..! ஸ்கூலுக்கு போன புள்ளைக்கு நடந்த கொடூரம்...வெளியான திடுக்கிடும் உண்மைகள்!!!

முன்ஜென்ம இணைப்பு குறித்து எழுந்த கேள்விகள்

தகவலின்படி, விதேசியின் மகன் திலீப் கடந்த 2012ஆம் ஆண்டு பெங்களூருவில் கடற்கரையில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அவரது உடல் அங்கேயே தகனம் செய்யப்பட்டது. அதற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து ஜீதன் பிறந்துள்ளான். இந்த விவரங்கள் ஒன்றோடொன்று பொருந்தியதால், மறுபிறவி குறித்த பேச்சு மீண்டும் எழுந்துள்ளது.

சிறுவன் கூறிய தகவல்கள் துல்லியமாக இருப்பதாக இரு குடும்பங்களும் கூறியுள்ள நிலையில், இந்த விசித்திர சம்பவம் பற்றி தெரிந்து கொள்ள அண்டை கிராமங்களில் இருந்தும் மக்கள் வருகை தருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இது வேகமாக பரவி, பல்வேறு கருத்துகளை கிளப்பியுள்ளது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Lakhimpur boy #Reincarnation case #மறுபிறவி #Uttar Pradesh News #viral story India
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story