தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அப்பா பேச்சை கேட்கமாட்டான்.. சொத்து மட்டும் வேணுமா?.. தந்தை செய்த பகீர் செயல்..!

அப்பா பேச்சை கேட்கமாட்டான்.. சொத்து மட்டும் வேணுமா?.. தந்தை செய்த பகீர் செயல்..!

Uttar Pradesh Agra Native Father Gives Land Property to Court Judge Name Son Torture Advertisement

தனது அறிவுரையை கேட்காத மகனுக்கு சொத்து எழுதிக்கொடுக்க மறுப்பு தெரிவித்த தந்தை, அதனை நீதிமன்றத்திற்கு எழுதிக்கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா, பிபால்மண்டி நிரலாபாத் பகுதியை சார்ந்தவர் கணேஷ் சங்கர் பாண்டே (வயது 83). இவர் புகையிலை வியாபாரம் செய்து வரும் நிலையில், இவருக்கு சொந்தமாக ரூ.இரண்டரை கோடி மதிப்பு சொத்துக்கள் உள்ளது. 

இவரது மூத்த மகன் திக் விஜய், மொத்த சொத்தில் ஒரு பகுதியை தனது பெயருக்கு மாற்றி தரக்கூறி தந்தையிடம் கேட்டு வந்துள்ளார். இதற்கு கணேஷ் சங்கர் பாண்டே மறுப்பு தெரிவித்த காரணத்தால், இருவருக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கணேஷ் சங்கர் பாண்டே தனது சொத்துக்கள் அனைத்தையும் ஆக்ரா நீதிபதியின் பெயருக்கு மாற்றியுள்ளார். இதுகுறித்து கணேஷ் சங்கர் பாண்டே தெரிவிக்கையில், "என் மூத்த மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தையோடு வசித்து வருகிறார். 

Uttar pradesh

என்னிடம் சொத்துக்களை அவர் கேட்டு வந்த நிலையில், அவர் என்னை மதிப்பதும் இல்லை. எனது வார்த்தைகளை கேட்பதும் இல்லை. இவ்வாறான நிலையில் சொத்து கேட்டு தகராறு செய்து வந்ததால், ஆக்ரா நீதிபதி பெயருக்கு இதனை மாற்றி எழுதி கொடுத்துள்ளேன். 

எனது மரணத்திற்கு பின்னர் அரசு எனது சொத்துக்களை பயன்படுத்திக்கொள்ள இயலும்" என்று தெரிவித்துள்ளார். சொத்து பிரச்சனையால் தந்தை செய்த செயல் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்கும், ஆச்சரியத்துக்கும் உள்ளாக்கியுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Uttar pradesh #Agra #India #father #Land Property #son
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story