காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சியமைத்த உத்தவ் தாக்கரே! பதவியேற்புவிழாவில் கலந்துகொள்ளாத சோனியா மற்றும் ராகுல்!
Uthav thakre cm in maharastra

மஹாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றும் கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சி அமைக்க முடியாமல் கடந்த 12-ஆம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதனையடுத்து சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைக்க இருந்த நிலையில், எதிர்பாராத திருப்பமாக கடந்த 23-ஆம் தேதி ஜனாதிபதி ஆட்சி விலக்கி கொள்ளப்பட்டு, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் ஆதரவுடன் பாரதீய ஜனதா ஆட்சி அமைத்தது.
இதனையடுத்து மாட்டிய மாநிலத்தில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும், அஜித்பவார் முதலமைச்சராகவும் பதவி ஏற்றனர். ஆனால் இதனை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நேற்று மாலைக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு தேவேந்திர பட்னாவிஸுக்கு உத்தரவிட்டதால், தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் துணை முதலமைச்சர் பதவியை விட்டு அஜித்பவார் விலகினார். அவரை தொடர்ந்து முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசும் ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இன்று மராட்டிய முதலமைச்சராக பதவியேற்று கொண்டார். ஆனால் பதவியேற்பு விழாவில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை.