என்னால டார்ச்சல் தாங்க முடியல... எனக்கு சாகனும் போல இருக்கு! அந்த டிரெஸ்ஸை அம்மா தான் வாங்கித் தந்தாங்க.... ! யூடியூப் லைவில் உண்மையை போட்டு உடைத்து கண்ணீருடன் கதறிய பெண் சப்-இன்ஸ்பெக்டர்!!!
உத்தரப் பிரதேசத்தில் வைரல் வீடியோ சர்ச்சையில் இடைநீக்கம் செய்யப்பட்ட பெண் எஸ்.ஐ. அனு கோலிஸ், மிரட்டல்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து யூடியூப் நேரலையில் விளக்கம் அளித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் வைரல் வீடியோ சர்ச்சையில் சிக்கி இடைநீக்கம் செய்யப்பட்ட பெண் உதவி ஆய்வாளர் அனு கோலிஸ், முதன்முறையாக வெளிப்படையாக விளக்கம் அளித்துள்ளார். யூடியூப் நேரலையில் பேசிய அவர், தனது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுமதியின்றி பகிர்ந்ததாக சமூக ஊடகப் பிரபலம் ஒருவர் மீது குற்றச்சாட்டு முன்வைத்தார். தொடர்ந்து மிரட்டல்கள் வருவதால் தானும் தனது குடும்பத்தினரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பிறகு ஏற்பட்ட நெருக்கடிகள் குறித்து பேசிய அனு கோலிஸ், தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும், குடும்பத்தினரையும் சிலர் குறிவைப்பதாகவும் கூறினார். இந்த தொடர் அழுத்தங்களால் தற்கொலை எண்ணங்கள் கூட தோன்றியதாக அவர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உனக்கு அடிமை நான்.... சிறுமியுடன் சகஜமாக விளையாடிய கீரிப்பிள்ளை! ஆடியெல்லாம் காட்டுது பாருங்க.... இணையத்தை தெறிக்கவிடும் சிறுமியின் வீடியோ!!!
வைரல் வீடியோ குறித்து அனு கோலிஸ் விளக்கம்
சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோவில் தான் அணிந்திருந்த உடை குறித்து விளக்கம் அளித்த அவர், ஆக்ராவில் தனது தாயாருடன் சென்றபோது ஒரு மாலில் அந்த ஆடையை வாங்கியதாக கூறினார். அதில் ஆட்சேபனைக்குரிய வகையில் எதுவும் இல்லை என்றும், தனது குடும்பத்தினருக்கே அந்த உடை குறித்து எந்தப் பிரச்சனையும் இல்லாத நிலையில், மற்றவர்கள் ஏன் இதை பெரிதுபடுத்துகின்றனர் என்றும் கேள்வி எழுப்பினார்.
பணம் சம்பாதித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு மறுப்பு
சமூக ஊடகங்களில் தவறான உள்ளடக்கங்களை வெளியிட்டு பணம் சம்பாதித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் அனு கோலிஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். சந்தேகம் இருப்பவர்கள் தனது வங்கிக் கணக்குகள் மட்டுமின்றி குடும்பத்தினரின் கணக்குகளையும் ஆய்வு செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதளப் பதிவுகள் பெரும்பாலும் உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பானவையே என்றும் விளக்கம் அளித்தார்.
விசாரணைக்கு ஒத்துழைப்பேன்
எந்தவொரு விசாரணைக்கும் முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக கூறிய அனு கோலிஸ், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதால் பதவியை ராஜினாமா செய்யும் எண்ணம் இல்லை என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே, வைரல் வீடியோ சர்ச்சை தொடர்பாக குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். குற்றச்சாட்டுகள், வீடியோவின் பின்னணி மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட உள்ளடக்கங்கள் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இறந்த மகனின் உடலை தோளில் சுமந்து கண்ணீரோடு நடந்த தந்தை! நடந்தது என்ன? அதிர்ச்சி சம்பவம்!!!