×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வேலைக்கு சேர்ந்த 45 நாளிலே போலீஸ் ஸ்டேஷனில் செய்யக் கூடாததை செய்த இளம் காவலர்! உடனே அதிகாரி காட்டிய அதிரடி செயல்..!!!

உத்தரப்பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் பணியில் சேர்ந்த 45 நாட்களிலேயே ரூ.35,000 லஞ்சம் வாங்கிய இளம் காவலர் கையும் களவுமாக சிக்கி, துறை விசாரணைக்குப் பிறகு நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

Advertisement

உத்தரப்பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் பணியில் சேர்ந்த வெறும் 45 நாட்களிலேயே இளம் காவலர் ஒருவர் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கியுள்ளார். தொடர்ந்து நடத்தப்பட்ட துறை ரீதியான விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து, அவரை காவல்துறையில் இருந்து நிரந்தரமாக பணிநீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

45 நாட்களில் பணி பறிபோன காவலர்

33 வயதான விவேக் குமார், கடந்த 2025 ஜூன் மாதம் காவல்துறையில் இணைந்து பயிற்சியை முடித்தார். அதன்பின், 2026 ஏப்ரல் 24 அன்று ஷாஜஹான்பூரின் ஜெய்திபூர் காவல் நிலையத்தில் தனது முதல் பணியைத் தொடங்கினார். பணியில் காட்டிய சுறுசுறுப்பின் காரணமாக, காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அஸ்வினி குமாரின் மெய்க்காப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

இதையும் படிங்க: நள்ளிரவில் வீடு புகுந்து 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி! அதிரடியாக கைது செய்த போலீஸ்..!!!

ரூ.35 ஆயிரம் வாங்கியபோது கையும் களவுமாக கைது

தகவலின்படி, கடந்த ஜூன் 12 அன்று ஜெய்திபூர் பகுதியில் பதிவான கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவரிடம், வழக்கை சுமுகமாக முடித்துத் தருவதாகக் கூறி விவேக் குமார் பணம் கேட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காவல் நிலைய வளாகத்திலேயே ரகசியமாக வலை விரித்தனர். அங்கு ரூ.35,000 லஞ்சத் தொகையை பெற்றுக் கொண்டபோது, மறைந்திருந்த அதிகாரிகள் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

எஸ்பியின் அதிரடி நடவடிக்கை

விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்ட ஷாஜஹான்பூர் எஸ்பி சௌரப் தீட்சித், முதற்கட்டமாக இன்ஸ்பெக்டர் அஸ்வினி குமாரை பணியிடை நீக்கம் செய்தார். தொடர்ந்து நடைபெற்ற துறை ரீதியான விசாரணையில் விவேக் குமார் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் உறுதியானதால், அவரை காவல்துறை பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பணியில் சேர்ந்த குறுகிய காலத்திலேயே நடந்த இந்த நடவடிக்கை, உத்தரப்பிரதேச காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: போதை மருந்து கொடுத்து செய்யக்கூடாததை மனைவிக்கு செய்த கொடூர கணவன்! குடும்பமே சேர்ந்து மிரட்டல்.... அப்பாவி பெண்ணின் பகீர் பின்னணி இதோ.!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Uttar Pradesh Police #ஷாஜஹான்பூர் #Bribery case #லஞ்ச ஒழிப்புத்துறை #Police Dismissal
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story