கட்டு கட்டாய் இருந்த பணம்! ஆனால் வீட்டு உரிமையாளர் செய்த அந்த ஒரு காரியத்தை பாருங்க... விசித்திர சம்பவ வீடியோ..!!!
உத்தரப்பிரதேசத்தில் தூங்கிக் கொண்டிருந்த வீட்டு உரிமையாளரின் பணக்கட்டில் இருந்து ஒரே ரூ.500 நோட்டை திருடிய பணியாளரின் சிசிடிவி காட்சி வைரலாகியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டத்தில், தூங்கிக் கொண்டிருந்த வீட்டு உரிமையாளரின் பணக்கட்டில் இருந்து ஒரே ஒரு ரூ.500 நோட்டை மட்டும் வீட்டுப் பணியாளர் திருடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆயிரக்கணக்கான ரூபாய் இருந்த பணக்கட்டில் இருந்து ஒரு நோட்டை மட்டும் எடுத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை அப்படியே வைத்துச் சென்றுள்ளார். இந்தச் செயல் முழுவதும் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
தூங்கிக் கொண்டிருந்த உரிமையாளரிடம் கைவரிசை
புலந்த்ஷஹர் மாவட்டம், சிக்கந்தராபாத் பகுதியைச் சேர்ந்த தில் பேகம்பூர் கிராமத்தில் கல்லு மேவாட்டி என்பவர் இரவில் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தார். அவரது தலையணைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த குர்தா பையில், பல ஆயிரம் ரூபாய் கொண்ட ரூ.500 நோட்டுக் கட்டு இருந்துள்ளது.
உரிமையாளர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் கவனித்த வீட்டுப் பணியாளர், அந்தப் பையை எடுத்து பணக்கட்டை வெளியே எடுத்துள்ளார். அதிலிருந்து ஒரே ஒரு ரூ.500 நோட்டை உருவிய அவர், மீதமுள்ள பணத்தை எந்த மாற்றமும் தெரியாத வகையில் மீண்டும் பைக்குள் வைத்து அங்கிருந்து நகர்ந்துள்ளார். பின்னர் எதுவும் நடக்காதது போல் தனது படுக்கைக்குச் சென்று உறங்கியுள்ளார்.
சிசிடிவி காட்சியால் அம்பலமான திருட்டு
பணியாளர் செய்த கைவரிசை வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. மறுநாள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த கல்லு மேவாட்டி, பணம் திருடப்பட்டதை அறிந்து அந்தப் பணியாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையடுத்து, தனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்ட பணியாளர், காவல்துறை நடவடிக்கைக்கு பயந்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘கொள்கைவாதி திருடன்’ என கிண்டல்
பணக்கட்டில் இருந்த முழுப் பணத்தையும் எடுக்காமல், ஒரே ஒரு ரூ.500 நோட்டை மட்டும் திருடிய பணியாளரின் செயல் இணையத்தில் நகைச்சுவையாகப் பேசப்பட்டு வருகிறது. இதனால், அவரை ‘கொள்கைவாதி திருடன்’ என இணையவாசிகள் கிண்டலாக அழைத்து வருகின்றனர். சிசிடிவியில் பதிவான இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.