×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

85 வயது அப்பாவை குழந்தை மாறி பாத்துக்கணும்...! ஆனால் இப்படி ஒரு கொடுமையா? சொத்துக்காக முதியவரை அடித்து சித்திரவதை செய்த பெற்ற மகன்...! கண் கலங்க வைக்கும் காட்சி...!!!

உத்தரப் பிரதேசத்தில் சொத்துக்காக 85 வயது தந்தையை மகன் கொடூரமாக தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. வீடியோ வெளியான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

உத்தரப் பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில் சொத்துக்காக 85 வயது தந்தையை அவரது இளைய மகன் கொடூரமாக தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. உடல்நலம் குன்றி பலவீனமாக இருந்த முதியவரை தாக்கிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

சொத்துக்காக முதியவர் மீது தாக்குதல்

பாண்டா மாவட்டம் காமாசின் காவல் எல்லைக்குட்பட்ட ஓஜானகர் பகுதியில் சங்கர் குப்தா (85) வசித்து வருகிறார். வயது முதிர்வு காரணமாக உடல் மிகவும் பலவீனமடைந்த நிலையில் உள்ள அவரை, சொத்து தொடர்பான பிரச்சினையில் அவரது இளைய மகன் குஷேல் குப்தா தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அதிர்ச்சி! கணவரை கைது செய்ய போன போலீஸ்! தடுக்க முயன்று கெஞ்சிய கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்ததால்... பிஞ்சு சிசுவும் தாயும் பலியான சோகம்!!!

முதியவர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் காட்சிகளை அவரது மூத்த மகன் கைலாஷ் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, வீடியோ ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ

தந்தையை மகன் தாக்கும் காட்சிகள் எக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளன. இந்த வீடியோ 60 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. வயது முதிர்ந்த பெற்றோரை சொத்துக்காக தாக்கியதாக கூறப்படும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியதால், விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகனை கைது செய்ய கோரிக்கை

வீடியோவை பார்த்த பலரும் சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சொத்து தகராறு தொடர்பான பின்னணி மற்றும் தாக்குதல் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: ஐயோ... ஆபத்தை உணராமல் தண்டவாளத்தில் மேய்ந்த ஆடுகள்! பெண் முயற்சி செய்தும் முடியல... அதிவேக ரயில் மோதி கண்முன்னே டஜன் கணக்கான ஆடுகள் உயிரிழப்பு! அதிர்ச்சி வீடியோ...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#உத்தரப் பிரதேசம் #85 வயது முதியவர் #Property Dispute #மகன் தாக்குதல் #viral video
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story