×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தூக்கில் தொங்கிய படி கணவருக்கு வீடியோ அனுப்பிய மனைவி! அவுங்களோட டார்ச்சல் தாங்க முடியல.... யாரையும் சசும்மா விடாத்தீங்க! அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரப் பிரதேசத்தில் 20 வயது அழகுக்கலைஞர் தற்கொலைக்கு முன் கணவருக்கு அனுப்பிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. AI போலி வீடியோக்கள் மூலம் மிரட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 20 வயதான அழகுக்கலைஞர் ஒருவர் தற்கொலைக்கு முன் தனது கணவருக்கு அனுப்பிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் போலி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வைத்து மிரட்டப்பட்டதே இந்த முடிவுக்குக் காரணம் என அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலைக்கு முன் கணவருக்கு அனுப்பிய வீடியோ

எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்த கோமல் மிஸ்ரா (20), தற்கொலைக்கு சில நிமிடங்களுக்கு முன்பு தனது கணவர் சௌரபுக்கு வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ருபினா கான், சபினா கான், அபிஷேக் சிங் மற்றும் ரிதேஷ் ராய் ஆகிய நான்கு பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு, திருமணத்திற்கு முந்தைய தகவல்களை கூறி தன்னை மிரட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மனைவி! 2 பொண்ணுங்க இருக்காங்க.... நிறைய பாவம் செஞ்சுட்டேன்! இதுக்கு இதுதான் காரணம்... ஆணுறுப்பையே வெட்டி கிணற்றில் வீசிய விவசாயி! பகீர் சம்பவம்...!!!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிரட்டியதாக குற்றச்சாட்டு

கோமலின் கணவர் சௌரப் அளித்த புகாரில், AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வைத்து அந்த கும்பல் பணம் பறிக்க முயன்றதாக குற்றம்சாட்டியுள்ளார். இதனால் அவரது மனைவி தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை

வீடியோவை பார்த்ததும் வீட்டிற்கு விரைந்து சென்ற சௌரப், மனைவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கைப்பற்றப்பட்ட வீடியோ உள்ளிட்ட ஆதாரங்களை ஆய்வு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: என்னால டார்ச்சல் தாங்க முடியல... வீட்டைக் கூட்டுவது, துடைப்பது, பாத்திரம் கழுவுவது எல்லாம் கணவன் தான்! ஆனாலும் கொடுமை படுத்தும் மனைவி... இன்ஸ்டாவில் வீடியோவால் வெளியான மரண வாக்குமூலம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Uttar Pradesh News #AI Fake Video #அழகுக்கலைஞர் #blackmail case #Cyber crime
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story