×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தேசம் முழுவதும் ஒரே மாதிரியான டிரைவிங் லைசன்ஸ்; மத்திய அரசு அறிவிப்பு..!

தேசம் முழுவதும் ஒரே மாதிரியான டிரைவிங் லைசன்ஸ்; மத்திய அரசு அறிவிப்பு..!

Advertisement

நாடு முழுவதும் சர்வதேச ஓட்டுனர் உரிமம் அளிப்பதில் குடிமக்களுக்கு சிறந்த வசதிகளை கொண்ட அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

புதுடெல்லி, நாடு முழுவதும் சர்வதேச ஓட்டுனர் உரிமம் அளிப்பதில் குடிமக்களுக்கு சிறந்த வசதிகளை கொண்ட அறிவிக்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வழங்கப்படும் சர்வதேச ஓட்டுனர் உரிமங்களின் வடிவம், அளவு, முறை, வண்ணம் ஆகியவற்றில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. 

இதனால் வெளிநாடுகளில் இந்த சர்வதேச ஓட்டுனர் உரிமத்தைப் பயன்படுத்துபவர்கள், சிரமங்களை சந்தித்து வந்தனர். இந்த நிலையில் இந்த திருத்தத்தின் மூலமாக ஜெனீவா ஒப்பந்தத்தின்படி நாடு முழுவதும் ஒரே மாதிரியான சர்வதேச ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது.

ஓட்டுனர் உரிமத்துடன் சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை இணைப்பதற்கு கியூஆர் கோடு விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உதவி எண்களும் மின்னஞ்சல் முகவரிகளும் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிக்கையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Central Government #announcement #Uniform driving licenses
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story