இணையத்தில் பேசி மயக்கி... பெண்களை குறி வைத்து ஏமாற்றிய இருவர் கைது... பல லட்ச ரூபாய் மோசடி அம்பலம்.!
இணையத்தில் பேசி மயக்கி... பெண்களை குறி வைத்து ஏமாற்றிய இருவர் கைது... பல லட்ச ரூபாய் மோசடி அம்பலம்.!
திருமணமான பெண்களை ஏமாற்றி அவர்களை வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டி பணம் சம்பாதித்து வந்த கேரள மாநிலம் இடுக்கியைச் சார்ந்த இளைஞர் ஒருவரும் குமுளியை சார்ந்த இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்தவர் மாத்யூ ஜோஸ் (36) இவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் குமுளியைச் சேர்ந்த சக்கீர்(24) என்பவர் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து பேஸ்புக்,வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களின் மூலம் திருமணமான பெண்களையே மாற்றி ஆசை வார்த்தை கூறி அவர்களிடம் பணம் மற்றும் நகைகளை மிரட்டி வாங்கி இருக்கின்றனர்.
இவர்கள் கேரளா மற்றும் தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பெண்களையும் ஏமாற்றி வந்தது தற்போது அம்பலமாகியிருக்கிறது. கடந்த மாதம் ஹரியானாவை சார்ந்த திருமணமான பெண் ஒருவரை ஏமாற்றி தங்கள் காதல் வலையில் வீழ்த்தி குமுளி வரச் செய்துள்ளனர். அங்கு தனியார் லாட்ஜில் ரூம் எடுத்து அந்தப் பெண்ணுடன் இருவரும் உல்லாசம் அனுபவித்து இருக்கின்றனர். அதனை தங்கள் செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளனர். இந்த வீடியோவை வைத்து அந்த பெண்ணை மிரட்டி 35 லட்ச ரூபாய் பணம் மற்றும் நகைகளையும் பறித்துள்ளனர்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து மேத்யூ ஜோஸ் மற்றும் பக்கீர் இருவரும் டெல்லிக்கு தப்பிச் சென்றுள்ளனர். இடுக்கி காவல் துறை அதிகாரி குரியகோஸ் தலைமையில் டெல்லி சென்ற காவல்துறை அதிகாரிகள் இருவரையும் கைது செய்து பீர்மேடு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதுபோன்ற ஏராளமான பெண்களை ஏமாற்றி பணம் சம்பாதித்தது தெரிய வந்திருக்கிறது.