பாலிவுட் லாபியால் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை.. பாலிவுட் படங்களை பார்க்காதீர்கள் - ரசிகர்கள் போர்க்கொடி.!
பாலிவுட் லாபியால் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை.. பாலிவுட் படங்களை பார்க்காதீர்கள் - ரசிகர்கள் போர்க்கொடி.!
ஹிந்தி திரையுலகில் இளம் நடிகராக வலம்வந்த சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த 2 வருடத்திற்கு முன்னர் மும்பையில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டவாறு பிணமாக மீட்கப்பட்டார். இவரின் மரணத்தில் தற்போது வரை பெரும் சர்ச்சை நீடித்து வருகிறது.
ஒருபுறம் விசாரணையில் போதைப்பொருள் உபயோகம் தொடர்பான தகவல் தெரியவந்து, பல்வேறு நடிகைகள் மற்றும் நடிகர்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஆனால், அதுதொடர்பான கூற்றுகளை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்த அவரின் ரசிகர்கள், பாலிவுட் லாபியால் அவர் தற்கொலை செய்துள்ளார் என்ற பகிரங்க குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
பாலிவுட் திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்கள் பலரும் திட்டமிட்டு, பெண் நடிகையை காதலிக்க வைத்து, சுஷாந்த்தை ஏமாற்றி தற்கொலை செய்ய வைத்துவிட்டனர். மேலும், அவருக்கு திரையுலகில் பல்வேறு மறைமுக அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. தனிநபரின் வளர்ச்சியை விரும்பாத அந்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் காரணமாக சுஷாந்த் தற்கொலை செய்துள்ளார் என்று கூறி வருகின்றனர்.
இன்று வரை அவரின் மரணத்தில் உள்ள மர்மம் நீடித்து வரும் நிலையில், பாலிவுட் திரைப்படங்களை அறவே புறக்கணிக்க வேண்டும் என சுஷாந்தின் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் ஹேஷ்டேக் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.