எங்ககிட்டையே உங்க வேலையை காட்டுறீங்களா? தவெகவை மிரட்டிய காங்கிரஸுக்கு முதல்வர் விஜய் வைத்த செக்..!!!
2029 நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்து விஜய் வகுக்கும் அரசியல் வியூகங்கள் காங்கிரஸ் மேலிடத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், தமிழக களநிலவரத்தை அக்கட்சி உணர வேண்டும் எனவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
2029 நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்து தவெக தலைவர் விஜய் வகுத்து வரும் அரசியல் வியூகங்கள் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளன. சமீபத்திய ‘மூட் ஆஃப் தி நேஷன்’ கருத்துக்கணிப்பில் 9.2 சதவீத ஆதரவுடன் விஜய் 3-வது இடத்தில் இருப்பதாக வெளியான தகவலும் காங்கிரஸ் மேலிடத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கிடையே, விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தேசிய அரசியலில் கவனம் பெறும் விஜய்யின் வளர்ச்சி
முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மமக உள்ளிட்ட 22 அமைப்புகள் இடம்பெற்ற மெகா கூட்டணியை எதிர்த்து தவெக தனித்து களம் கண்டது. ஆளுங்கட்சியின் நிர்வாக பலத்துக்கு மத்தியில் நடைபெற்ற அந்தத் தேர்தலில் தவெக சுமார் 35 சதவீத வாக்குகளைப் பெற்றதாக கூறப்படுகிறது. பல கட்சிகள் இணைந்த கூட்டணிக்கு எதிராக விஜய் பெற்ற இந்த ஆதரவு, தற்போது அவரது அரசியல் மூலதனமாக பார்க்கப்படுகிறது.
காங்கிரஸின் தமிழக கணக்கு மாறியதா?
2016-ம் ஆண்டுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வரவும், ஆட்சியைத் தக்கவைக்கவும் காங்கிரஸின் வாக்கு வங்கி முக்கியமாக இருந்தது. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் காங்கிரஸால் தனது நிலைப்பாட்டை வலுவாக முன்வைக்க முடிந்தது. ஆனால், தவெகவை பொறுத்தவரை நிலைமை வேறுபட்டதாக உள்ளது. தேர்தலுக்கு முன்பே தவெகவுடன் கூட்டணி அமைக்காமல் திமுக கூட்டணியில் தொடர்ந்ததன் மூலம், தமிழகத்தில் தனது பேரம் பேசும் பலத்தை காங்கிரஸ் குறைத்துக்கொண்டதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
விஜய்யின் ஆதரவு நிபந்தனைகளுடன் இருக்குமா?
2029 நாடாளுமன்றத் தேர்தலில் விஜய்யின் ஆதரவு கிடைத்தாலும், அது முந்தைய கூட்டணி அரசியலைப் போல நிபந்தனையற்றதாக இருக்க வாய்ப்பில்லை என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஆதரிப்பது குறித்து முடிவு எடுத்தாலும், தென் மாநிலங்களின் உரிமைகள், தொகுதி மறுவரையறை, நிதிப் பகிர்வு உள்ளிட்ட விவகாரங்களில் தவெக தனது நிலைப்பாட்டை முன்வைக்கலாம். அதோடு, நாடாளுமன்றத்தில் 100 தொகுதிகளை இலக்காகக் கொண்டிருப்பதாக விஜய் தரப்பு கூறி வரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைகளிலும் அதற்கேற்ப வலுவான பேரம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், தமிழகத்தின் தற்போதைய அரசியல் களநிலவரத்தை காங்கிரஸ் மேலிடம் நேரடியாக மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற கருத்தும் எழுந்துள்ளது. உள்ளூர் அரசியல் விமர்சனங்களை மட்டும் வைத்து முடிவெடுப்பதைவிட, 2029 தேர்தல் வியூகம் குறித்து விஜய் தரப்பு எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது காங்கிரஸுக்கு முக்கியமானதாக இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதையும் படிங்க: அம்மா ஜெயலலிதா பாணியை கையில் எடுத்த CM விஜய்! ஆட்சி மாறியது திமுகவுக்கு அடுக்கடுக்காக விழும் அடி.... ஸ்தம்பித்த தலைமைச் செயலக வட்டாரம்!!!