×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தெருவில் திறந்து கிடந்த மின்சார பெட்டி! விளையாட்டாக தொட்ட சிறுவன்! அடுத்த நொடி தூக்கி வீசப்பட்டு.... பதறவைக்கும் வீடியோ!!!

துருக்கியில் திறந்த மின்சார பெட்டியைத் தொட்ட சிறுவன் மின்சாரம் தாக்கி காயம் அடைந்த சம்பவம் CCTV-வில் பதிவு. பாதுகாப்பு அலட்சியத்துக்கு எதிர்ப்பு எழுகிறது.

Advertisement

துருக்கியின் ஷான்லூர்பா மாகாணத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவர், திறந்து கிடந்த மின்சாரப் பெட்டியைத் தொட்டதால் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்துள்ளார். விரான்ஷெஹிர் பகுதியில் நடந்த இந்த சம்பவம் அருகிலிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சிறுவன்

தகவலின்படி, நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், பாதுகாப்பின்றி திறந்து வைக்கப்பட்டிருந்த மின்சாரப் பெட்டியை கவனிக்காமல் கையை வைத்துள்ளார். அடுத்த நொடியே மின்சாரம் தாக்கியது. அதனால் அவர் பலத்த அதிர்ச்சியுடன் பின்னால் தூக்கி வீசப்பட்டார். இதில் அவரது கைக்கு கடுமையான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதி 

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் உடனே ஓடிவந்து அவரை மீட்டனர். இதையடுத்து அவசரமாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் சிகிச்சையில் உள்ளார். உயிருக்கு ஆபத்து இல்லை என ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: பலி கொடுக்க கொண்டுவரப்பட்ட பசு! கயிறை இழுத்து வாலை பிடித்ததும் ஆக்ரோஷமாக ஓடியது! 4 பேர் அடக்கியம் முடியல..... கயிரில் சிக்கிய நபர்! அதிர்ச்சி வீடியோ...!!!

பாதுகாப்பற்ற மின்சார பெட்டிகள் மீது கேள்வி

இந்த சம்பவத்துக்கு காரணம் பாதுகாப்பற்ற மின்சார பெட்டி என்பதே பொதுமக்களின் குற்றச்சாட்டு. பொது இடங்களில் இவ்வாறு திறந்து வைக்கப்படும் மின்சார வசதிகள் குழந்தைகளுக்கு ஆபத்தானவை என அவர்கள் எச்சரிக்கின்றனர். சம்பவம் வைரலானதையடுத்து அதிகாரிகளின் அலட்சியத்திற்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளன.

 

இதையும் படிங்க: திருமண வீட்டில் மாப்பிள்ளையிடம் விளையாட்டாக நண்பர்கள் செய்த விஷயம் வினையாக முடிந்தது! பதைப்பதைக்க வைக்கும் வீடியோ..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Turkey accident #மின்சாரம் தாக்கியது #electric box safety #viral video #Child Injury
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story