×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது.! நன்றி நண்பரே.. பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த அமெரிக்க அதிபர்!

trumph thanks to modi

Advertisement

அமெரிக்காவின்  244-வது சுதந்திர தினம் நேற்று (சனிக்கிழமை) கொண்டாடப்பட்டது. அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அமெரிக்க மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து இந்திய பிரதமர் மோடி அவரது டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.

மோடி பதிவிட்ட ட்விட்டர் பதிவில், "அதிபர் டிரம்பிற்கும் அமெரிக்க மக்களுக்கும் 244-வது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.  உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாக, இந்த நாளில் சுதந்திரத்தையும் மனிதத்தையும் மதித்து கொண்டாடுகிறோம்’’ என தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் பிரதமர் மோடியின் டுவிட்டிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிலளித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்பின் பதிவில், “நன்றி நண்பரே, இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#modi #Trumph #America #India
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story