தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு என்ன இடம்? வெளியானது பட்டியல்.! 

ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு என்ன இடம்? வெளியானது பட்டியல்.! 

Transparency International Bribery Report 2024  Advertisement

 

சர்வதேச அளவில் உள்ள நாடுகளில் நடைபெறும் ஊழல் தொடர்பான விஷயங்களை கண்காணித்து, கடந்த 1995 முதல் டிரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் அமைப்பு, ஊழல் நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 

இந்த நிறுவனம் அரசுத்துறையில் நிலவி வரும் ஊழல் தொடர்பாக தொழில் வல்லுனர்களிடம் கருத்துக்களை சேகரித்து, அதன்பேரில் முடிவுகளை வெளியிடுகிறது.

இதையும் படிங்க: சாக்லேட் கொடுப்பதாக 13 வயது சிறுமியிடம் அத்துமீறல்; வீட்டை தாழிட்டு அதிர்ச்சி., அலறலில் அதிர்ந்துபோன அக்கம்-பக்கம்.!

இந்தியாவுக்கு 96 வது இடம்

கடந்த 2024 ம் ஆண்டுக்கான ஊழல் புலனாய்வு தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ள நிலையில், ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 96 வது இடத்தில் இருக்கிறது. 

மொத்தமாக 180 நாடுகளின் பட்டியலில் இந்தியா 96 வது இடத்தினை தக்கவைத்துள்ளது. இந்த நிறுவனம் பூஜ்யம் என்பதை ஊழல் நடக்கும் நிர்வாகத்தையும், 100 என்ற மதிப்பெண்ணை ஊழல் இல்லாத நிர்வாகத்திற்கும் வழங்குகிறது. 

1 மதிப்பெண் இழந்தது

அந்த வகையில், 180 நாடுகளின் பட்டியலில் 96 வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் மதிப்பெண் 38 ஆகும். கடந்த 2023 ம் ஆண்டில் 39 மதிப்பெண் பெற்ற இந்தியா, தற்போது 1 மதிப்பெண்ணை இழந்துள்ளது. 

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தானுக்கு 135 வது, இலங்கை 121 வது, வங்கதேசம் 149 வது, சீனா 76 வது இடத்தினை பெற்றுள்ளது. ஊழல் குறைந்த நாடுகளில் டென்மார்க் முதலிலும், பின்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அடுத்த இடத்தையும் தக்க வைத்துள்ளது. 

இதையும் படிங்க: ஒரே பாட்டிலில் சோடா குடித்த மூவர் அடுத்தடுத்து பலி.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#World news #Transparency International #Bribery #India #ஊழல் நாடுகள்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story