×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒரு நொடியில் மாறிய வாழ்க்கை.. பறிபோன 3 உயிர்கள்.. அருவியில் 3 பெண்களின் அதிரவைக்கும் வீடியோ.!

Andhra Pradesh Alluri News: அருவியில் குளித்த 3 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது ஆந்திரப்பிரதேசம் மாநிலம் அல்லூரி மாவட்டத்தில் நடந்தது.

Advertisement

நீச்சல் தெரியாமல் அருவி நீரில் ஆனந்த குளியலிட்ட சிறுமிகள் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

உள்ளூர் அருவி:

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அல்லூரி மாவட்டம், ஆனந்தகிரி மண்டலத்தில் மலங்கும்மி அருவி உள்ளது. இங்கு வார இறுதி விடுமுறை நாட்களில் சுற்றுலாப்பயணிகள் பலரும் நேரில் வந்து நீராடி செல்வது வழக்கம். தற்போது மழைப்பொழிவு இல்லை என்பதால், குட்டைகளில் தேங்கி வரும் நீரில் சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: Namakkal: விஷப்பூச்சி கடித்து சிறுமிக்கு நேர்ந்த சோகம்.. கண்ணீரில் பெற்றோர்.!

3 சிறுமிகள்:

இந்நிலையில், உள்ளூரைச் சேர்ந்த 3 இளம் சிறுமிகளான திரிஷ் (வயது 17), ரத்னகுமாரி (வயது 16), பவித்ரா (வயது 16) ஆகியோர் சம்பவத்தன்று அருவிக்கு குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அவர்கள் விடியோவும் பதிவு செய்துள்ளனர். பெண்கள் குளித்துக்கொண்டு இருக்கும்போதே, குட்டையில் ஆழமான பகுதிக்கு தவறுதலாக சென்றதாக தெரியவருகிறது.

பரிதாப பலி:

இதனால் மூவரும் நீரில் உயிருக்காக தத்தளித்த நிலையில், அபயக்குரல் எழுப்பி இருக்கின்றனர். உடனடியாக உதவி கிடைக்காததால் மூவரும் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நேரில் வந்து பெண்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், நீச்சல் தெரியாத நபர்கள் இதுபோன்ற குட்டை, ஏரி, ஆறுகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

உயிரிழந்த சிறுமிகளின் இறுதி வீடியோ:

இதையும் படிங்க: கட்டிடம் இடிக்கும் பணியில் சோகம்.. பரிதாபமாக பறிபோன இளம் உயிர்கள்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Andhra Pradesh #death #Waterfalls
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story