இப்படி கூட நடக்குமா... நம்பவே முடியல! பல் துலக்கும்போது கழுத்தில் உள்ள ரத்த குழாய் வெடித்து, ரத்தம் பீய்ச்சி அடித்து.... அனைவரையும் அதிர வைத்த சம்பவம்!
பல் துலக்கும் போது கழுத்து ரத்தக்குழாய் வெடித்து இளைஞர் உயிர் தப்பிய அரிதான சம்பவம் மருத்துவ உலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது
தினசரி நாம் அலட்சியமாக செய்யும் பழக்கங்கள் கூட சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தான நிலையை உருவாக்கக்கூடும் என்பதற்கு சத்தீஸ்கரில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியூட்டும் உதாரணமாக அமைந்துள்ளது. பல் துலக்கும் போது நேர்ந்த இந்த அபூர்வ விபத்து, மருத்துவ நிபுணர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதிர்ச்சியூட்டிய சம்பவம்
சத்தீஸ்கரைச் சேர்ந்த ராகுல் குமார் ஜங்டே வழக்கம்போல் காலை நேரத்தில் பல் துலக்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது கழுத்துப் பகுதியில் இருந்த ரத்தக்குழாய் வெடித்து, ரத்தம் பீய்ச்சி அடித்தது. இதனால் அவர் மயக்கமடைந்தார். இந்த அரிதான பாதிப்புக்கு மருத்துவ ரீதியாக ‘Carotid Artery சிதைவு’ என்று பெயர்.
மருத்துவ காரணம் என்ன?
பொதுவாக கழுத்துப் பகுதியில் கடுமையான அழுத்தம், திசு கிழிவு அல்லது விபத்துகள் காரணமாக இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால் ராகுலின் சம்பவத்தில், உடலில் ஏற்கனவே இருந்த ஒரு அரிதான மரபணு குறைபாடு அல்லது ரத்தக்குழாய் சுவர்களின் பலவீனமே முக்கிய காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ரத்தக்குழாயின் உட்புற அடுக்கு கிழிந்து, அதன் வழியாக ரத்தம் கசியும்போது இவ்வாறு வெடிப்பு ஏற்படுகிறது.
உயிர் காக்கப்பட்ட தருணம்
இந்த நிலையில் விஷ்ணுகாந்த் திவாரி உள்ளிட்டோர் உடனடியாக உதவி செய்து ராகுலை மருத்துவமனையில் அனுமதித்தனர். நேரத்தில் கிடைத்த மருத்துவ உதவி மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சையால் அவர் உயிர் பிழைத்தார். பொதுவாக விபத்துகளில் மட்டுமே நிகழும் இத்தகைய ரத்தக்குழாய் வெடிப்பு, பல் துலக்குதல் போன்ற சாதாரண செயலில் நடந்தது மருத்துவ வரலாற்றில் மிக அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
மருத்துவ உலகின் எச்சரிக்கை
இந்த சம்பவம், உடலில் மறைந்திருக்கும் உடல்நல பிரச்சினைகள் எப்போது வேண்டுமானாலும் வெளிப்படக்கூடும் என்பதைக் காட்டுகிறது. கழுத்து, தலைப்பகுதிகளில் திடீர் வலி, மயக்கம் அல்லது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
சாதாரணமாக தோன்றும் தினசரி பழக்கங்களிலும் உடல்நலத்தை அலட்சியப்படுத்தக்கூடாது என்பதையும், இவ்வாறான அரிதான மருத்துவ அவசர நிலைகள் குறித்து விழிப்புணர்வு அவசியம் என்பதையும் இந்த சம்பவம் நினைவூட்டுகிறது.