மீண்டும் ஒரு தக்காளி விவசாயி கொலை..!!
மீண்டும் ஒரு தக்காளி விவசாயி கொலை..!!
ஆந்திராவில் உள்ள அன்னமயா என்னும் மாவட்டத்திற்கு உட்பட்ட பெட்டா திப்பா சமுத்திரம் அருகே மதுகர் ரெட்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அவரது விவசாய நிலத்தில் தக்காளியை பயிரிட்டு, பின்னர் அதை காக்கும் வகையில் இரவு நேரத்தில் பண்ணையில் தூங்குவது வழக்கம்.
இதே போல் சம்பவ தினத்தன்று விவசாய நிலத்தில் வேலைகளை முடித்துவிட்டு நேற்று இரவு தனது பண்ணையில் உறங்கிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் திடீரென்று மதுகர் ரெட்டியின் கழுத்தை நெரித்துள்ளார்.
முன்னதாக மதனப்பள்ளி மண்டலத்தில் உள்ள போடுமல்லாதிண்ணே என்னும் கிராமத்தில் 62 வயது தக்காளி விவசாயி கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதன் அடிப்படையில் கடந்த ஏழு நாட்களில் தக்காளி விவசாயி கொலை செய்யப்பட்டுள்ளது இது இரண்டாவது முறையாகும்.