×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

டிவியில் வந்த பாட்டுக்கு அப்படியே நடனமாடிய சிறுமி.. கடைசி நொடியில் காத்திருந்த அதிர்ச்சி.. வைரலாகும் சிறுமியின் நடனம்

டிவியில் வரும் நடந்தை பார்த்துக்கொண்டு சிறுமி செய்த காரியம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Advertisement

டிவியில் வரும் நடந்தை பார்த்துக்கொண்டு சிறுமி செய்த காரியம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

காவேரி என்ற டிவிட்டர் பயனர் ஒருவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ பதிவில், சிறுமி ஒருவர் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் பாடல் ஒன்றுக்கு, அந்த பாட்டில் நடனமாடும் சிறுமியை பார்த்து அதேபோல் தானும் நடனமாட முயற்ச்சி செய்கிறார். தொடக்கத்தில் இருந்து பாட்டில் வரும் சிறுமி போலவே தனது அசைவுகளையும் செய்துவருகிறார் சிறுமி.

சிறுமியின் இந்த அழகான நடனம் மற்றும் சேட்டையை வீட்டில் இருந்த ஒருவர் படமாக்கிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் தொலைக்காட்சியில் வரும் அந்த பாட்டின் ஒருகட்டத்தில் அந்த பாட்டில் வரும் சிறுமி பேருந்தின் கைபிடிக்கம்பியை பிடித்து தொங்கியவாறு நடனமாடுகிறார்.

இதனை பார்த்த இந்த சிறுமி, அந்த சிறுமியை போன்றே செய்யவேண்டும் என்பதற்காக தொலைக்காட்சியை தாவிப்பிடித்து அதில் தொங்கியவாறு நடனமாட முற்சிக்கிறார். அப்போது டிவியுடன் சேர்ந்து சிறுமியும் கீழே விழும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Viral News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story