ரீல்ஸ் மோகம்... கடற்கரையில் கார் சாகசத்தால் நடந்த அராஜகம்..! வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி..! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ...!!!
கேரளாவின் திருச்சூர் சாமக்கால் கடற்கரையில் ரீல்ஸ் எடுக்க காரை ஆபத்தாக ட்ரிஃப்ட் செய்தபோது கவிழ்ந்த விபத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்தார்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாமக்கால் கடற்கரையில் ரீல்ஸ் வீடியோ எடுக்க முயன்றபோது ஏற்பட்ட கார் விபத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்தார். மணற்பரப்பில் மாருதி ஜிப்சி காரை வேகமாக இயக்கி ட்ரிஃப்ட் செய்தபோது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தலைகீழாகக் கவிழ்ந்தது. காரின் பின்புற இருக்கையில் இருந்த சிறுவன் வாகனத்தின் அடியில் சிக்கிய நிலையில், மீட்புப் பணிகள் நடைபெற்றபோதும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை.
மணலில் கட்டுப்பாட்டை இழந்த கார்
சாமக்கால் கடற்கரையில் சமூக வலைதளங்களுக்காக வீடியோ பதிவு செய்யும் நோக்கில் சிலர் காரில் சாகச முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மணற்பரப்பில் காரை அதிவேகமாக திருப்பி ட்ரிஃப்ட் செய்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் திடீரென கவிழ்ந்தது. இதில் காரில் பயணித்த குழந்தைகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இதையும் படிங்க: மகன் சொன்ன ஒரே வார்த்தை... அடுத்த நொடி ஆத்திரம் தாங்காமல் தாய் செய்த கொடூரம்! விடிய விடிய உடல் அருகே அமர்ந்து போட்ட நாடகம்... பகீர் சம்பவம்!!!
காரின் அடியில் சிக்கிய சிறுவன்
வாகனம் தலைகீழாகக் கவிழ்ந்ததில் பின்புற இருக்கையில் அமர்ந்திருந்த 14 வயது சிறுவன் அதன் அடியில் சிக்கிக்கொண்டான். சத்தம் கேட்டு அங்கு திரண்ட உள்ளூர் மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அதிகாரிகளும் சிறுவனை மீட்க முயன்றனர். இருப்பினும் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை
சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் வீடியோக்களுக்காக ஆபத்தான முறையில் வாகனங்களை இயக்குவது குறித்து ஏற்கனவே பல்வேறு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த உயிரிழப்பு அதுகுறித்த கவனத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது. ரீல்ஸ் வீடியோ எடுக்கும் முயற்சியில் நடந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வாகன ஓட்டுநர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.