×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாட்டியிடம் செயின் பறிக்க முயற்சி.. ஹேன்பேக்கால் வெளுத்துவிட்ட 10 வயது சிறுமி.. பரபரப்பு வீடியோ காட்சி வைரல்.!

பாட்டியிடம் செயின் பறிக்க முயற்சி.. ஹேன்பேக்கால் வெளுத்துவிட்ட 10 வயது சிறுமி.. பரபரப்பு வீடியோ காட்சி வைரல்.!

Advertisement

செயின் பறிப்பு சம்பவம் தோல்வியடைந்த நிலையில், ஆத்திரத்தில் இளைஞர் மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு சென்றது குறித்த பதைபதைப்பு வீடியோ வைரலாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகர் பகுதியில் தனது பேத்திகளுடன் மூதாட்டி ஒருவர் சாலையில் நடந்து சென்றுகொண்டு இருந்தார். 

அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் முகத்தை மூடிக்கொண்டு, மூதாட்டியை நோட்டமிட்டவாறு இளைஞர் வைத்துள்ளார். அவர் சற்றும் எதிர்பாராத சமயத்தில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டார். 

இதனால் பதறிப்போன மூதாட்டி தனது நகைகளை கையில் பிடித்தவாறு அலறவே, அவரின் 10 வயது பேத்தி கயவனை தனது கைப்பையால் அடித்து விரட்ட முயற்சித்தார். 

அதற்குள் பொதுமக்களும் வந்துவிட திருடன் மூதாட்டியை கீழே தள்ளிவிட்டவாறு அங்கிருந்து சென்றான். மூதாட்டியை மீட்டு அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.

இந்த சம்பவம் கடந்த பிப் 25ம் தேதி நடைபெற்ற நிலையில், தற்போதுதான் அதன் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணையும் நடந்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#இந்தியா #மகாராஷ்டிரா மாநிலம் #maharashtra #Grand mother attacked #Thieft snatched #Latest news #CCTV Camera
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story