54 வயது பாதிரியாருடன் 24 வயது இளம்பெண் ஓட்டம்.! பதறிப்போன பெற்றோர்.!
கர்நாடக மாநிலத்தில் 54 வயது பாதிரியாருடன் 24 வயது இளம்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் நடந்து உள்ளது.
கர்நாடக மாநிலம் பல்லாரி அருகே கிருஸ்துவ தேவாலயம் ஒன்று இருந்துள்ளது. இந்த தேவாலயத்தில் 54 வயது நிரம்பிய ரவிக்குமார் என்பவர் பாதிரியாராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் 24 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் தேவாலயத்திற்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால் பாதிரியாருக்கும் அந்த இளம்பெண்ணிற்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற இளம்பெண், அதன்பின்னர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் பெற்றோர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தநிலையில் பாதிரியார் ரவிக்குமார் மாயமாகிவிட்டதாக காவல் நிலையத்தில் மற்றொரு புகார் வந்துள்ளது. இதனால் இரண்டையும் இணைத்து விசாரணை செய்கையில் பாதிரியாரும் - இளம்பெண்ணும் காதலித்து ஓட்டம் பிடித்துள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பாதிரியாரையும், இளம்பெண்ணையும் வலைவீசி தேடிவருகின்றனர்.