தன்னை துஷ்பிரயோகம் செய்தவனால் கொல்லப்பட்ட தந்தை.! உடலை தோளில் சுமந்துச்சென்ற மகள்.! நெஞ்சை உருக்கும் புகைப்படம்.!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு கவுரவ் சர்மா என்பவர் 20 வயது பெண் ஒருவரை பா

உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு கவுரவ் சர்மா என்பவர் 20 வயது பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதனை அறிந்த இளம் பெண்ணின் தந்தை இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து கௌரவ் சர்மாவிற்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம்.
இதனையடுத்து கவுரவ் சர்மா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த கவுரவ் சர்மா பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை சுட்டுக்கொன்றுள்ளார். இந்தநிலையில், பாதிக்கப்பட்ட பெண் தனது தந்தையின் கொலைக்கு நீதி கேட்ட கதறிய வீடியோ இணையத்தில் வைரலானது.
இதனையடுத்து கவுரவ் சர்மா குடும்பத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளதாக உத்தர பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர், மற்ற குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறினார். இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண் கொல்லப்பட்ட தந்தையின் உடலை தோளில் சுமந்துச்சென்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி கலங்க வைத்துள்ளது.