அடக்கடவுளே... பெற்றவர் கண்முன்னே 8 வயது சிறுவனுக்கு நிகழ்ந்த சோகம்... பொழுதைக் கழிக்க ஏரிக்கு சென்ற போது நிகழ்ந்த விபரீதம்!!
அச்சச்சோ!! என்ன ஆச்சு..! முதலை வாயில் சிக்கிய சிறுவன்... பின்பு நடந்த துயர சம்பவம்..!

பிலிப்பைன்ஸ் நாட்டின் கோஸ்டா ரிகாவில் வசித்து வருபவர்கள் ஜூலியோ ஓடேரோ - மார்க்கினி பெர்னாண்டஸ். இவர்கள் அங்குள்ள மாட்டினா ஏரிக்கு பொழுதை கழிப்பதற்காக சென்றுள்ளனர்.
அப்போது இவர்களது 8 வயது மகன் ஏரிக்கரை ஓரமாக விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்து ராட்சஷ முதலை ஒன்று அந்த எட்டு வயது சிறுவனை நீருக்கடியில் இழுத்துச் செல்லவே பெரும் கூச்சலிட்டுள்ளான் அச்சிறுவன். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுவனை மீட்க ஓடி வந்தனர்.
ஆனால் அதற்குள் முதலை அச்சிறுவனை தண்ணீருக்குள் இழுத்துச் சென்ற கொன்றது. மகனின் உடலை பார்த்து கதறிய பெற்றோர் செய்வதறியாமல் திகைத்தனர். முதலையால் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவனின் உடல் இன்னும் மீட்கப்படவில்லை.
இந்த மாட்டினா ஏரியில் அதிக முதலைகள் வாழ்வதால் எந்த முதலை சிறுவனை கொன்றது என்று தெரியாததால் சிறுவனின் உடலை கண்டறிவதில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.