×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பயங்கரம்.. அண்ணனுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த இளம்பெண்.. ஆத்திரமடைந்த தம்பியின் கொடூர செயல்.!

பயங்கரம்.. அண்ணனுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த இளம்பெண்.. ஆத்திரமடைந்த தம்பியின் கொடூர செயல்.!

Advertisement

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள  கோதூர் கிராமத்தில் கணவனை இழந்த தேஜஸ்வினி என்னும் இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சலபதி என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தேஜஸ்வினி தனது குடும்பத்தை விட்டுவிட்டு சலபதியுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர்களது கள்ளத்தொடர்பை சலபதியின் தம்பி முரளி கண்டித்துள்ளார். மேலும் தேஜஸ்வினியிடம் தனது அண்ணனின் வாழ்க்கையை கெடுத்து விடாதே என்று அறிவுரை கூறியுள்ளார். இருப்பினும் இவர்களது கள்ளத்தொடர்பானது நீடித்துக் கொண்டே இருந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சலபதியின் தம்பி முரளி தனது நண்பர்களுடன் சேர்ந்து தேஜஸ்வினியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தேஜஸ்வினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளான முரளி மற்றும் அவரது நண்பர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் இளம்பெண் ஒருவர் தகாத உறவால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #Murder #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story