×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

டெல்லியில் பயங்கர விபத்து; டிவைடரில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறி 4 பேர் பலி..!

டெல்லியில் பயங்கர விபத்து; டிவைடரில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறி 4 பேர் பலி..!

Advertisement

டெல்லி சீமாபுரி பகுதியில் நேற்று இரவு சாலை டிவைடரில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதியதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

டெல்லி போக்குவரத்துக் கழக பஸ் ஸ்டாப் அருகே அதிகாலை 1.51 மணியளவில் நடந்த இந்தச் விபத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இறந்தவர்கள் கரீம் (52), சோட் கான் (25), ஷா ஆலம் (38), மற்றும் ராகு (45) என அடையாளம் காணப்பட்டனர். 

காயமடைந்தவர்களில் மனீஷ் (16), பிரதீப் (30) ஆகியோர் அடங்குவர். விபத்து நடந்தபோது அவர்கள் சாலை டிவைடர் மீது தூங்கிக் கொண்டிருந்ததாக காவல்துறையினர் கூறினர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் லாரியுடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#world #delhi #Lorry runs over people #People sleeping #விபத்து #டெல்லி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story