'96' பாணியில், ReUnion.. 35 வயதில் துளிர்த்த பள்ளி காதல்... 3 குழந்தைகளின் உயிரை எடுத்த தாய்.!
'96' பாணியில், ReUnion.. 35 வயதில் துளிர்த்த பள்ளி காதல்... 3 குழந்தைகளின் உயிரை எடுத்த தாய்.!

விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இணைந்து நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் தான் 96. இந்த திரைப்படம் பள்ளி பருவத்தில் ஏற்படும் காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும். அத்துடன் பள்ளி படிப்பை முடித்த பின்னர் இருவேறு திசையில் பிரிந்து சென்ற காதலர்கள் மீண்டும் ரியூனியனில் சந்திக்கும்போது தங்களது காதலை மறக்க முடியாமல் தவிக்க கூடிய காட்சிகளை ரசிகர்களை துடிக்க வைக்கும் விதமாக இயக்குனர் காண்பித்து இருப்பார்.
இந்த திரைப்படம் வந்த காலகட்டத்தில் பலரும் தங்களது Ex காதலை நினைவு கூர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். அதே பாணியில், தெலுங்கானாவை சேர்ந்த ஒரு 35 வயது பெண் ரியூனியனில் தனது பத்தாம் வகுப்பு நன்பரை சந்தித்து இருக்கிறார். அப்போது இருவரும் ஒன்றாக பழக ஆரம்பித்த நிலையில், அவர்களுக்குள் திருமணத்தை தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது.
தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ தனது 3 குழந்தைகள் இடையூறாக இருப்பதாக நினைத்த அந்த ரஜிதா என்ற அந்த பெண் பெற்ற குழந்தை என்றும் பாராமல் அவர்கள் 3 பேரையும் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்துள்ளார். தனது கணவருக்கும், தனக்கும் 20 வயது வித்தியாசம் இருப்பதால் திருமண உறவில் அவர் நிம்மதியாக இருக்கவில்லை என்றும், எனவே வேறு வாழ்க்கையை தேடி தான் குழந்தைகளை கொலை செய்தேன் என்றும் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: உல்லாசத்துக்காக கணவரின் உறவினருடன்., மனைவி ஓட்டம்.. ஆற்றில் மிதந்த சடலம்.!
குழந்தைகளை கொன்ற ரஜிதா தன் கணவரிடம் சாப்பிட்ட உணவு சேராமல் குழந்தைகள் மூச்சு திணறி உயிரிழந்ததாக நாடகம் ஆடி இருக்கிறார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: மனைவியை காதலனுடன் அனுப்பி வைத்த கணவன்; புதிய மாமியார் வைத்த ட்விஸ்ட்டால் ஷாக்.!