பரபரப்பு வீடியோ: ஓடிக்கொண்டிருக்கும் ஆட்டோவை கவிழ்த்த வாலிபர்... நூலிழையில் உயிர் தப்பிய பெண்!
குடிபோதையில் இளைஞர் ஒருவர் ஆட்டோவை கவிழ்த்தநிலையில் இளம் பெண் ஒருவர் நூலிழையில் உயிர் தப்ப
குடிபோதையில் இளைஞர் ஒருவர் ஆட்டோவை கவிழ்த்தநிலையில் இளம் பெண் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆட்டோ ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு பாலம் ஒன்றில் வந்துகொண்டிருந்தபோது, ஆட்டோவின் பின் இருக்கையில் இருந்த இளைஞர் ஒருவர் அங்கிருந்து எழுந்து, ஆட்டோவில் தொங்கியபடி முன் இருக்கைக்கு தாவியுள்ளார்.
இதனால் வேகமாக வந்துகொண்டிருந்த ஆட்டோ, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. அப்போது எதிர்திசையில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த இளம் பெண் ஒருவர் மீது அந்த ஆட்டோ மோதியதில் அந்த பெண்ணும் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
அந்த பெண் தலையில் தலைக்கவசம் அணிந்திருந்ததால் அவர் அதிர்ஷ்டவசமாக எந்த காயமும் இல்லாமல் உயிர் தப்பினார். அதேபோல் ஆட்டோவில் இருந்தவர்களும் எந்த ஒரு காயமும் இல்லாமல் தப்பின்னர். இதுகுறித்து நடந்த விசாரணையில், அந்த இளைஞர் குடிபோதையில் இருந்ததாகவும், பின் இருக்கையில் இருந்து முன் இருக்கைக்கு தாவியதாலையே இந்த விபத்து நடந்ததாகவும் தெரியவந்துள்ளது.