×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நா மட்டும் எதுக்கு இங்க இருந்துட்டு... திருமணத்துக்கு ரெடியான காதல் ஜோடி! காதலனுக்கு நடந்த அந்த அதிர்ச்சியால்.. காதலி எடுத்த விபரீத முடிவு..! பதறவைக்கும் சம்பவம்..!! !

தெலங்கானாவில் காதலன் சாலை விபத்தில் உயிரிழந்த சோகத்தை தாங்க முடியாமல் இளம் பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஷாம்ஷாபாத் சித்தார்த் காலனியைச் சேர்ந்த நர்மதா என்ற இளம் பெண், காதலன் சாலை விபத்தில் உயிரிழந்த துயரத்தை தாங்க முடியாமல் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. திருமணம் செய்ய இருவீட்டாரும் ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து ஷாம்ஷாபாத் ஆர்ஜிஐஏ காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணத்துக்கு தயாரான காதல் ஜோடி

நர்மதாவும் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சித்தார்த்தும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். அவர்களின் காதலுக்கு இரு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததுடன், திருமண ஏற்பாடுகளும் நடைபெற்று வந்ததாக தெரிகிறது. இதனிடையே எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட சாலை விபத்தில் சித்தார்த் உயிரிழந்தார்.

இதையும் படிங்க: எப்படியெல்லாம் சொல்லி புள்ளையை ஏமாத்திருக்கான்...! சிப்ஸ், ஆப்பிள் தர்றேன் என்கிட்ட வா... 13 வயது சிறுமியிடம் அத்துமீறிய லாரி டிரைவர்! அந்த நேரத்தில் கடவுளாய் வந்த கடைக்காரார்.... பகீர் பின்னணி..!!!

காதலன் மறைவால் மன அழுத்தத்தில் நர்மதா

சித்தார்த்தின் திடீர் மரணம் நர்மதாவை கடுமையாக பாதித்ததாக கூறப்படுகிறது. குடும்பத்தினரிடமும் சகோதரியிடமும் தனது வேதனையை பகிர்ந்து கொண்ட அவர், சித்தார்த் இல்லாமல் வாழ்வது குறித்து கவலை தெரிவித்ததாக போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர் தொடர்ந்து ஆறுதல் கூறியபோதும், அவரது மனநிலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை.

வீட்டில் தனியாக இருந்தபோது சோகம்

இந்நிலையில் குடும்பத்தினர் அனைவரும் பணி காரணமாக வெளியே சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த நர்மதா உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. வீடு திரும்பிய பெற்றோர் மகளின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஷாம்ஷாபாத் ஆர்ஜிஐஏ காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். நர்மதாவின் உடல் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. காதலன் உயிரிழந்த பின்னர் ஏற்பட்ட மனவேதனையே அவரது முடிவுக்கு காரணமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: நல்லது சென்ஞ்சவருக்கா இந்த நிலைமை? வெள்ள நிவாரணம் வழங்கி.. வீடு திரும்பிய வாலிபருக்கு நேர்ந்த பயங்கரம்! பீகாரில் நடந்த அதிர்ச்சி..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#தெலங்கானா செய்தி #Narmadha #காதலன் மரணம் #Shamshabad #RGIA Police
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story