×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மனைவி, மாமனார் எரித்துக்கொலை.. வரதட்சணை கேட்டு மருமகன் காட்டிய பயங்கரம்.!

Crime News: இரண்டாவது குழந்தை பிறந்ததும் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்த மருமகன், தனது மாமனார் மற்றும் மனைவியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

வரதட்சணை சண்டையில் மனைவி, மாமனாரை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

திருமணம் & வரதட்சணை:

Telangana Crime News: தெலுங்கானா மாநிலம், கடிபிகொண்டா கிராமத்தில் வசித்து வருபவர் ராஜசேகர் (வயது 51). இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராஜஸ்ரீ, தேஜஸ்வினி, மனோஜினா என 3 மகள்கள் இருக்கின்றனர். மூத்த மகள் ராஜஸ்ரீ, வாரங்கல் மாவட்டம் ஷியாம்பெட் ஹவேலி பகுதியைச் சேர்ந்த பிரவீன் (30) என்பவரை மணந்துள்ளார். இருதரப்பு சம்மதத்துடன் நடந்த திருமணத்தின்போது, ரூ.3 லட்சம் வரதட்சணை மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: சித்தி மகளுடன் கள்ளக்காதல்.. 20 வயது கல்லூரி மாணவி கொலை.. கணவனின் கொடூரம்.. திருவள்ளூரில் பயங்கரம்.!

கூடுதலாக கேட்டு தொந்தரவு:

திருமணத்துக்குப்பின் பிரவீன் தனது குடும்பத்தாருடன் ஹைதராபாத்தில் வசித்து வந்துள்ளார். அங்குள்ள தனியார் குளிர்பான நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். தம்பதிகளுக்கு ஜெயன்ஸ் (வயது 2) என்ற மகன் இருக்கிறார். இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த ராஜஸ்ரீக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தை பிறந்ததில் இருந்து கூடுதல் வரதட்சணை கேட்டு பிரவீன் தனது மனைவி ராஜஸ்ரீயிடம் தொந்தரவு செய்து வந்துள்ளார். 

மாமனார்-மனைவி கொலை:

இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு ராஜ ஸ்ரீ தனது தந்தை வீட்டுக்கு, குழந்தைக்கு அன்னபிரசன்ன பூஜை செய்ய வந்துள்ளார். கடந்த வாரம் ப்ரவீனும் வந்த நிலையில், 2 நாட்களாக வரதட்சணை கேட்டு மாமனார் - மருமகன் இடையே தகராறு உண்டாகியுள்ளது. வாக்குவாதம் முற்றியபோது, பிரவீன் சுத்தியலை எடுத்து மனைவி, மாமனாரை தாக்கி இருக்கிறார். இதனால் தலையில் படுகாயமடைந்த இருவரும் மயங்கி சரிந்தனர். ஆத்திரம் தீராத பிரவீன் டீசலை எடுத்து வந்து இருவரின் உடலில் ஊற்றி தீ வைத்துள்ளார். இந்த சம்பவத்தில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குற்றவாளி கைது:

மாமனார், மனைவியை கொலை செய்த பிரவீன் ராஜஸ்ரீயின் மனைவியான அத்தைக்கு தொடர்புகொண்டு, தீ விபத்தில் இருவரும் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். பதறியபடி நேரில் வந்த உறவினர்கள் பார்த்தபோது, தலையில் சுத்தியல் காயம் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்து ராஜஸ்ரீயின் தங்கை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ப்ரவீனும் மகன், மகளுடன் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அவரை அக்கம்-பக்கத்தினர் தடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். விசாரணையில் உண்மை அனைத்தும் அம்பலமாகியுள்ளது.

இதையும் படிங்க: மனைவியின் தலையை துண்டித்து நடுவாசலில் வைத்த கணவன்.. நள்ளிரவில் நடந்த திடுக் சம்பவம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #dowry #Wife Father in Law Killed #தெலுங்கானா #வரதட்சணை #கொலை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story