அதிர்ச்சி! மண்டி பிரியாணி சாப்பிட்ட 19 வயது இளைஞர் உயிரிழப்பு! மேலும் 19 பேர் தீவிர சிகிச்சையில்... பெரும் சோகம்!!!
தெலங்கானா மேடக் மாவட்டத்தில் உணவகத்தில் மண்டி பிரியாணி சாப்பிட்ட 19 வயது இளைஞர் உயிரிழந்தார். மேலும் 19 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், உணவகம் மூடப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது.
தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் நர்சாபூரில் உள்ள ‘ஒன் பேலஸ்’ உணவகத்தில் மண்டி பிரியாணி சாப்பிட்ட 19 வயது இளைஞர் உயிரிழந்தார். உணவு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அவருக்கும் உடன் சாப்பிட்டவர்களுக்கும் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் 19 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது.
மண்டி பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக் குறைவு
உயிரிழந்த இளைஞர் சாய் ராம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நர்சாபூரில் உள்ள ‘ஒன் பேலஸ்’ உணவகத்தில் அவர் மண்டி பிரியாணி சாப்பிட்டதாகத் தெரிகிறது. அதன்பிறகு அவருக்கும் அவருடன் உணவு சாப்பிட்ட சிலருக்கும் கடுமையான உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாய் ராம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாதிக்கப்பட்ட மற்ற 19 பேரும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: காதலனுடன் பொது இடத்தில் தனியாக இருந்த இளம்பெண்...! பெண்ணின் மார்பை தொட்டு... அத்துமீறிய வாலிபர் கும்பல்! அட்டூழிய வீடியோ...!!!
உணவகத்தில் உரிமம் இல்லாதது கண்டுபிடிப்பு
தகவல் அறிந்த தெலங்கானா சுகாதாரத்துறை அமைச்சர் தாமோதர் ராஜ நரசிம்ஹா, இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளுடன், உணவகத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட உணவு மாதிரிகளும் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட உள்ளன. இதற்கிடையே, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட ஆய்வில், உணவகம் முறையான உணவுப் பாதுகாப்பு உரிமம் இல்லாமல் இயங்கி வந்ததாகக் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
உணவு மாதிரிகள் ஆய்வு; கடும் நடவடிக்கை எச்சரிக்கை
இளைஞரின் உயிரிழப்புக்கான காரணம் மற்றும் மற்றவர்களின் உடல்நலக் குறைவுக்கு உணவே காரணமா என்பது ஆய்வக முடிவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். மருத்துவ அறிக்கைகள், உணவு மாதிரிகள் ஆகியவற்றின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உணவுப் பாதுகாப்பு விதிகளை மீறி பொதுமக்களின் உடல்நலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: இன்ஸ்டா மூலம் தொடங்கிய காதல்...! திருமணம் செய்ய காதலன் வீட்டு வாசலில் தர்ணா... இளம்பெண் செய்த பரபரப்பு செயல்..!!!