இப்படி ஒரு பழக்கமா..? வயிற்று வலியால் துடித்த 15 வயது சிறுமி! ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்... வயிற்றிலிருந்து சிறுகுடல் வரை செல்லும் அறிய நோய்! விசித்திர சம்பவம்..!!!!
ஆந்திர மாநிலம் அனந்தபூரில் 15 வயது சிறுமியின் வயிற்றிலிருந்து 1.12 மீட்டர் நீளமுள்ள முடிக்கட்டியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
ஆந்திர மாநிலம் அனந்தபூரில், 15 வயது சிறுமியின் வயிற்றிலிருந்து 1.12 மீட்டர் நீளமுள்ள முடிக்கட்டியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். சிறுவயது முதலே தலைமுடியைப் பிடுங்கி சாப்பிடும் பழக்கம் இருந்ததால், வயிற்றுக்குள் முடி சேர்ந்து பெரிய கட்டியாக உருவாகியுள்ளது. கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
வயிற்றுக்குள் பெரிய முடிக்கட்டி உருவானது
சிறுமிக்கு சிறுவயது முதலே தனது தலைமுடியைப் பிடுங்கி உண்ணும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் விழுங்கிய முடி செரிமானமாகாமல் வயிற்றுக்குள் படிப்படியாகச் சேர்ந்து பெரிய கட்டியாக மாறியுள்ளது. காலப்போக்கில் அதன் அளவு அதிகரித்ததால் சிறுமிக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது.
வலி தாங்க முடியாத நிலையை எட்டியதால் சிறுமி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அரிய வகை பாதிப்பான 'ராப்புன்சல் சிண்ட்ரோம்' இருப்பதைக் கண்டறிந்தனர்.
1.12 மீட்டர் நீள முடிக்கட்டி அகற்றம்
இதையடுத்து அனந்தபூர் மருத்துவர்கள் குழு சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தது. சிக்கலான இந்தச் சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக முடித்தனர். அப்போது சிறுமியின் வயிற்றிலிருந்து 1.12 மீட்டர் நீளமும், சுமார் 750 கிராம் எடையும் கொண்ட பெரிய முடிக்கட்டி அகற்றப்பட்டது.
என்ன ராப்புன்சல் சிண்ட்ரோம்?
தலைமுடியைப் பிடுங்கி விழுங்கும் பழக்கத்தால், முடி வயிற்றில் சேர்ந்து கட்டியாக உருவாகும் நிலை டிரைக்கோபீசியா எனப்படுகிறது. அந்த முடிக்கட்டி வயிற்றிலிருந்து சிறுகுடல் வரை நீண்டு செல்லும் அரிய பாதிப்பே ராப்புன்சல் சிண்ட்ரோம் என அழைக்கப்படுகிறது. இத்தகைய பாதிப்பில் வயிற்றுவலி, வாந்தி, உணவு உட்கொள்வதில் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.