"நம்மளை வாழவிடமாட்டாங்க".. காதல் ஜோடி சமையல் அறையில் விபரீதம்.. அலறல் சத்தத்தால் பதறிப்போன அதிகாரிகள்.!
காதல் ஜோடி உயிருடன் தீ வைத்து தற்கொலைக்கு முயன்றது.
முகநூல் பழக்கம் காதல் ஜோடியின் உயிருக்கு எமனாக அமைந்தது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
பேஸ்புக் பழக்கம்:
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரோசாபாத், சிகோகாபாத் பகுதியில் வசித்து வருபவர் அருண் கதெரியா. இவருக்கு குஷி ஷர்மா என்ற 18 வயது இளம்பெண்ணுடன் முகநூல் வாயிலாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பேசி வந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியேறி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: "தலை முடி உதிர்வதால் சோகம்... " கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை.!!
உறுதி செய்த அதிகாரிகள்:
இவர்களை காணாது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, காதல் ஜோடியை அதிகாரிகள் அங்குள்ள சாரை, காலியா 2 என்ற பகுதியில் இருப்பதை உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து, காதல் ஜோடியை கண்டறிய அதிகாரிகள் நேரில் சென்றுள்ளனர்.
தற்கொலை முயற்சி:
அப்போது, அதிகாரிகள் வந்து நம்மை பிரித்துவிடுவார்கள் என்ற பயத்தில், இருவரும் வீட்டின் சமையல் அறையில் தங்களின் கை-கால்களை ஒருசேர கட்டிக்கொண்டு உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளது. ஒருகட்டத்தில் வீட்டில் இருந்து வந்த அலறல் சத்தம் கேட்டு அதிகாரிகள் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
இளைஞர் உயிர் ஊசல், பெண் பலி:
அங்கு தீயை அணைத்து உயிருக்கு போராடிய இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அருண் 75% தீ காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருகிறார். பெண்மணி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'என் ஆடு செத்துப்போச்சு'.. ஸ்காலர்ஷிப் பணத்தில் ஆடு வாங்கிய மாணவர் மரணம்.!