×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

டிக்-டாக்கில் அதிக லைக்குகள் கிடைக்காததால் விரக்தி; 18 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

Teen commited auicide due to less likes On tik tok

Advertisement

தன்னுடைய டிக்-டாக் வீடியோக்களுக்கு அதிகமான லைக்குகள் கிடைக்காததால் விரக்தியடைந்த நொய்டா இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு இருப்பதால் வீட்டிலேயே இருக்கும் பலர் வீடியோக்கள் பதிவு செய்து டிக்-டாக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதேபோல் நொய்டாவை சேரந்த 18 வயது இளைஞரும் பலவிதமான வீடியோக்களை சிரமப்பட்டு எடுத்து டிக்-டாக்கில் பதிவிட்டுள்ளார்.

வீட்டில் அந்த இளைஞரும் அவரது தந்தை மட்டுமே வசிந்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே அந்த இளைஞரின் வீடியோக்ககளுக்கு அதிகமான லைக்குகள் வருவதில்லை என தன் தந்தை மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அந்த இளைஞர் வீட்டின் அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதனை கண்டு அதிர்ச்சியடைந்த தந்தை காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

உடனடியாக விரைந்து வந்த காவல் துறையினர் அறையின் கதவினை உடைந்து இளைஞரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசாருக்கு தற்கொலைக்கான தடயங்கள் எதும் அங்கு சிக்கவில்லை. 

இந்நிலையில் இளைஞரின் தந்தை மற்றும் அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் டிக்-டாக் வீடியோவிற்கு லைக்குகள் கிடைக்காததால் தான் இளைஞர் விரக்தியடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#suicide #lockdown #Coronovirus #tik tok
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story