அடக்கொடுமையே.! சடை போடாததுக்கு 8-ம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்..! X-Ray ரிப்போர்ட்டைப் பார்த்து கதறி அழுத தந்தை.... கொடூர சம்பவம்.!!!
தலைமுடியைச் சடை பின்னி வராத எட்டாம் வகுப்பு மாணவியை பிளாஸ்டிக் குழாயால் ஆசிரியை தாக்கியதில், மாணவியின் இரண்டு கைகளிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
தலைமுடியைச் சடை பின்னி வரவில்லை என்ற காரணத்திற்காக எட்டாம் வகுப்பு மாணவியை ஆசிரியை பிளாஸ்டிக் குழாயால் கடுமையாகத் தாக்கியுள்ளார். தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் நடந்த இந்தத் தாக்குதலில், மாணவியின் இரண்டு கைகளிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், ஆசிரியையின் செயலுக்கு பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சடை பின்னி வராததால் மாணவியைத் தாக்கிய ஆசிரியை
நாகர்கர்னூல் மாவட்டம் பென்ட்லவெல்லி பகுதியில் உள்ள கஸ்தூரிபா காந்தி குருகுலப் பள்ளியில் மஞ்சுளா என்பவர் ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். அங்கு எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தலைமுடியைச் சடை பின்னாமல் பள்ளிக்கு வந்துள்ளார்.
இதையும் படிங்க: மாலை நேரத்தில் மாயமான தாய் மற்றும் 11 மாதப் பெண் குழந்தை..! மறுநாள் அதிகாலையில் சுர்மா நதியில் காத்திருந்த அதிர்ச்சி.. சோக சம்பவம்..!!!
இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை மஞ்சுளா, பிளாஸ்டிக் மின்சாரக் குழாயை எடுத்து மாணவியை கடுமையாகத் தாக்கியுள்ளார்.ஆசிரியையின் தாக்குதலில் மாணவியின் இரண்டு கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
இரண்டு கைகளிலும் எலும்பு முறிவு
தாக்குதலால் கைகளில் வீக்கம் ஏற்பட்டு, கடுமையான வலியால் மாணவி துடித்துள்ளார். இதையடுத்து, மாணவியின் தந்தை அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு எக்ஸ்-ரே பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவியின் இரண்டு கைகளிலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளனர்.
கைகளில் ஏற்பட்ட காயம் காரணமாக மாணவியால் அவற்றைச் சரியாகச் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டிய ஆசிரியையே, சாதாரண காரணத்திற்காக மாணவியை இவ்வளவு கடுமையாகத் தாக்கியிருப்பது பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவியின் தந்தை வேதனையுடன் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.