ரூ.200 கடனுக்காக டீக்கடைக்காரர் கொடூர கொலை.. உருட்டுக்கட்டையால் அடித்தே கொன்ற கொடூரம்.!
Bangalore News: தாயை கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதானவர், ரூ.200 கடனுக்காக டீக்கடைக்காரரை கொலை செய்து கைதாகி இருக்கிறார்.
கடனுக்காக நடந்த கொலை சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
கடன் டீ வாடிக்கை:
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் புறநகர், தொட்டபள்ளபுரா, தியாவசந்திரா கிராமத்தில் வசித்து வருபவர் மஞ்சுநாத் (வயது 40). இவர் அப்பக்காரனஹள்ளி பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரின் கடைக்கு உள்ளூரைச் சேர்ந்த முனியப்பா என்பவர் அடிக்கடி வந்து கடனுக்கு டீகுடித்துவிட்டு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: காதலிக்க மறுத்த இளம்பெண் கழுத்தறுத்து கொலை.. பொதுமக்களின் தர்ம அடியில் இளைஞனுக்கு துள்ளத்துடிக்க சாவு.!
வாக்குவாதம்:
கடந்த மே 12ம் தேதியும் மஞ்சுநாத் முனியப்பாவின் கடைக்கு வந்துள்ளார். அப்போது, கடனை தரும்படி முனியப்பாவிடம் கேட்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த முனியப்பர், அங்கிருந்த கட்டையை எடுத்து மஞ்சுநாத்தை சரமாரியாக தாக்கி இருக்கிறார்.
அரங்கேறிய சோகம்:
இந்த சம்பவத்தில் மஞ்சுநாத்தின் தலை, மார்பு பகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பொதுமக்களால் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். தொடர் தீவிர சிகிச்சையில் இருந்தவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலை சம்பவத்துக்கு பின் தலைமறைவான முனியப்பாவை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
இதையும் படிங்க: காதலி கண்முன் துள்ளத்துடிக்க ஓடஓட விரட்டி கொல்லப்பட்ட 18 வயது இளைஞர்.. சிதறி ஓடிய மக்கள்.. சினிமா பாணியில் படுபயங்கரம்.!