×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உடலை கேலி செய்து, அந்த வார்த்தை சொல்லி என் தொடையில் கை வைத்து செய்த டார்ச்சல்... TCS நிறுவனத்தில் அரங்கேறிய பயங்கரம்! இளம்பெண் ஊழியரின் கண்ணீர் வாக்குமூலம்..!!

நாசிக்கில் TCS நிறுவனத்தில் பெண் ஊழியர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்; 8 பேர் கைது, விசாரணை தீவிரம், நிறுவனமும் நடவடிக்கை எடுத்தது.

Advertisement

மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடந்ததாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார், நிறுவன பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பு மீதான கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. இந்த சம்பவம், ஐடி துறையில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் மரியாதை குறித்து சமூக அளவிலான விவாதத்தையும் தூண்டியுள்ளது.

பணியிடத்தில் தொடர்ந்த துன்புறுத்தல் குற்றச்சாட்டு

நாசிக்கில் உள்ள டிசிஎஸ் (TCS) நிறுவனத்தில் பணிபுரியும் புதிதாக திருமணமான பெண் ஊழியர் ஒருவர், தன்னுடன் பணியாற்றிய சில சக ஊழியர்கள் தொடர்ந்து துன்புறுத்தியதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ரசா மேனன், ஷாரூக் குரேஷி, ஆசிப் அன்சாரி உள்ளிட்டோர் தன்னை மனதளவிலும் உடலளவிலும் அவமானப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி அளிக்கும் குற்றச்சாட்டுகள்

புகாரின் படி, ஒருவரால் அவரது உடை இழுக்கப்பட்டதோடு, மற்றொருவர் தேவையற்ற இடத்தில் கை வைப்பது, தொடையில் தொடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.  மேலும், அந்தப் பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஆபாசமான கேள்விகளைக் கேட்டுள்ளனர். “உனக்குத் திருமணமாகிவிட்டது, உன் கணவன் வெளியூரில் இருக்கிறான், உனது உடல் தேவைகளை நான் பூர்த்தி செய்கிறேன்” என்று ஆசிப் அன்சாரி தன்னிடம் பேசியதாக அந்தப் பெண் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். அதோடு, அந்தப் பெண்னின் உடல் அமைப்பை கேலி செய்து, அவமானகரமான பட்டப்பெயர்களால் அழைத்த சம்பவங்களும் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அடச்சீ.... ஸ்கேனிங் அறையில் 34 வயது பெண்ணிடம் அத்துமீற ரேடியாலஜிஸ்ட்! வீடியோ ஆதாரத்துடன் போலீஸில் புகார்..!!!

காவல்துறை நடவடிக்கை தீவிரம்

இந்த விவகாரம் தொடர்பாக நாசிக் காவல்துறையினர் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், ஒரு பெண் மேலாளர் உட்பட மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தற்போது TCS Nashik அலுவலக பணியிட கலாச்சாரத்தைப் பற்றிய தீவிர கவனத்தை ஈர்த்துள்ளது.

அரசு மற்றும் நிறுவனத்தின் பதில்

இந்த சம்பவம் குறித்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தீவிர கவலை தெரிவித்துள்ளார். இதேவேளை, குற்றச்சாட்டில் சிக்கிய ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக டிசிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பணியிடங்களில் இத்தகைய செயல்களுக்கு இடமில்லை என்ற உறுதியையும் நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.

பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பாகவும் மரியாதையுடனும் பணியாற்றும் சூழலை உருவாக்குவது நிறுவனங்களின் அடிப்படை பொறுப்பாகும். இந்த சம்பவம், எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வை உருவாக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் உணர்த்துகிறது.

 

இதையும் படிங்க: நவராத்திரி நேரத்தில் 8 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை! பிஞ்சு உயிரை கொன்று உடலை மாவு டப்பாவில்.... வாடகைக்கு வசித்தவன் வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#TCS Nashik #பாலியல் துன்புறுத்தல் #IT Company Harassment #Nashik Police #Corporate Issue
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story