×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நுபுர் சர்மாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த டெய்லர்: வைரலான வீடியோவால் பரபரப்பு..!

நுபுர் சர்மாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த டெய்லர்: வைரலான வீடியோவால் பரபரப்பு..!

Advertisement

உத்தரபிரதேச மாநிலம், பரேலி மாவட்டத்தில்  உள்ள பரித்பூர் பகுதியை சேர்ந்த தையல்காரர் ஒருவர் நுபுர் சர்மாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ உத்திரப்பிரதேசம் முழுவதும் வைரலாக பரவியதுடன் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

முன்னதாக ஞானவாபி மசூதியில் நடந்த ஆய்வு குறித்து, தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜனதாவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா வெளியிட்ட கருத்து நாடு முழுவதும் சர்ச்சையையும் பெரும் அதிர்வலைகளையும் கிளப்பின. அந்த விவாதத்தில் அவர், இஸ்லாமியர்களின் இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், உத்திரபிரதேசத்தை சேர்ந்த தையல்காரர் ஒருவர் நுபுர் சர்மாவின் தலையை துண்டிப்பேன் என வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து சமூக நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவித்ததாக பரித்பூர் காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை நேற்று கைது செய்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Nupur Sharma #threatening #Social media #police arrest #Uttar pradesh
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story